Search This Blog

Tuesday, November 3, 2020

சிங்களப் பண்பாட்டிலிருந்து புத்தகம்


“சிங்களப் பண்பாட்டிலிருந்து…” புத்தகத்தை வாசித்து முடித்தேன்…
அதிலுள்ள 13 கட்டுரைகளிலும் முன்பு அறியாத பல விடயங்கள் இருந்தன… பல்கலைக்கழகங்களின் சமூகவியல் மற்றும் மானுடவியல் பீடங்கள் முன்னெடுக்க வேண்டிய ஆய்வுகளுக்கான தொடக்கங்கள் இதில் உள்ளன… சிங்களவரின் பண்பாடு, வரலாறு பற்றி இப்புத்தகம் பேசினாலும், தமிழரின் பண்பாட்டையும் வரலாற்றையும் அது தொட்டுச் செல்வது தவிர்க்க முடியாததே… கன்னித்தன்மையைப் பரிசோதித்தல் இலங்கைத் தமிழரிடையேயும் காணப்பட்டதாக வாசித்த ஞாபகமொன்று உள்ளது… வோல்ரர் லத்துவாஹெட்டி அவர்களது பேட்டி வெளிவந்த சமயத்தில் அதன் முக்கியத்துவம் எனக்கு அவ்வளவாகப் புரியவிலலை… ஆனால், இப்போது புரிகிறது…  ‘பெயருக்குள் ஒளிந்திருக்கும் சாதி’ என்பது சிங்களவருக்கு மாத்திரம் உரியதல்லவே! (இன்னும் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்குப் பின்னர், இதை ஆராய்ந்துதான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்! ஆயினும், பிற்நத இடத்தை வைத்துச் சாதியைக் கண்டுபிடிப்பது இலங்கைத் தமிழரிடையே, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரிடையே இன்றும் உள்ள வழக்கம்!) போர்த்துக்கேய, டச்சு மற்றும் ஆங்கிலேயப் பெயர்கள் சிங்களப் பெயர்களாகவே மாறி, இன்றும் அவ்வாறே நிலைத்து நிற்கின்றன. “கூரே” என்ற பெயரைப் பற்றித் தேடிப் பார்த்தேன்; காணக்கிடைக்கவில்லை!
“தொன் டேவிட் ஹேவவித்தாரண”வைப்பற்றி (வேறு யாருமல்ல… அநகாரிக தர்மபாலதான்!) வாசித்தபோது ஆறுமுக நாவலரைப்பற்றிய எண்ணங்கள் தவிர்க்க முடியாதவை… (ஆறுமுக நாவலர் வள்ளலாருக்கு எதிராக வழக்கு வைத்ததாகவும் தகவலொன்று உண்டு!).
சரவணனின் முயற்சிகள் காத்திரமானவையும் பாராட்டுக்குரியவையும்… தொடரட்டும் அவர் பணி! Pathmanathan Mahadevah

No comments:

Post a Comment