Search This Blog

Monday, November 2, 2020

'கொரோனா வைரஸுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளது, ஜப்பான் !'


"புதிய வாழ்க்கை முறையை" அறிவித்து, இந்த முறையை நீண்ட காலத்திற்குப் பின்பற்ற மக்கள் தயாராக வேண்டும் என்றும், கண்ணுக்குத் தெரியாமல்  பதுங்கியிருக்கும் வைரஸுடன் வாழவும் வேலை செய்யவும் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அந்நாடு அறிவித்துள்ளது.
இந்த புதிய வாழ்க்கை மாதிரியை உன்னிப்பாகப் பார்க்கும்போது - ​​பகுத்தறிவு, விஞ்ஞானம் மற்றும் இடர் மதிப்பீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு - ஜப்பானிய அரசாங்கம் இந்த நடைமுறை SOPகளை வகுத்துள்ளது.
"மோசமான" விஷயங்களை எல்லா நேரங்களிலும் கைவிட முடியாது என்பது ஜப்பானிய புரிதல். கொள்கையளவில் இடர் மதிப்பீட்டு மாதிரிகளைப் பயன்படுத்தி, மக்கள் தமது வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திசெல்ல பழகிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து.
கொரோனாவை தவிர்க்க மூன்று அடிப்படை அம்சங்கள் உள்ளன:
1. மக்களிடையே தேவையான இடைவெளியைப் பேணுதல்.
2. முகமூடி அணிதல்.
3. அடிக்கடி கைகளை கழுவுதல்.
மேலும்:
1. மக்கள் 2 மீட்டர் இடைவெளியை பேணல்
2. முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்தல்
3. மற்றவர்களுடன் நேருக்கு நேராகப் பேசுவதைத் தவிர்க்க முயற்சி செய்தல்
4. வீட்டிற்குச் சென்றதும் உடனடியாக முகத்தையும் துணிகளையும் கழுவுதல்
5. ஒருவரின் கையைத்தொட நேரிடின் அதனைக் கழுவுதல்
6. ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் எலக்ரோனிக் முறைகளை முடிந்தளவு பயன்ழடுத்தல்
7. சூப்பர்மார்க்கெட் ஷொப்பிங்குக்கு குடும்பத்தில் ஒருவரே செல்லல்
8. பொருட்களின் மாதிரிகளைத் தொடுவதைத் தவிர்த்தல்
9. பொது போக்குவரத்து பாவனையை முடிந்தளவு தவித்தல்.
10. பைக்கில் அல்லது கால்நடை யாக வேலைக்குச் செல்லுதல்.
11. மின்னணு வணிக அட்டைக ளைப் பயன்படுத்தல்
12. மீட்டிங், செமினார் போன்றவற்றுக்கு, ஸூம், டெலிவிஷனில் கொன்ஃபரன்ஸிங் முறைகளைப் பயன்படுத்தல்...
13. மண்டப வைபவங்களில், வருகையாளர்களின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்தல்,
14. வீட்டிலிருந்து வேலை செய்தல் அல்லது குறைந்தபட்ச நேரத்தில் வேலை செய்தல்.
15. வைரஸ் பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு, நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்தல்.
16. வணிக பயணங்களைக் கட்டுப்படுத்தல்.
17. தங்களுக்கு அறிகுறிகள் இருக்கும்போது, ​ சென்ற இடங்கள், சந்தித்த நபர்களை  நினைவில் வைத்திருத்தல்.
18. மற்றவர்களுடன் நேருக்கு நேர்  மற்றும்  அருகருகே அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்தல்.
19. உணவைப் பகிர்ந்து கொள்ள சிறிய பாத்திரங்களைப் பயன்படுத்தல்.
20. உணவில் அதிக காய்கறிகளை சேர்த்தல். சாப்பிடும்போது குறைவாக குறைவாகக் கதைத்தல்.
21. முடிந்தவரை ஒன்றாக உணவுக்கு விருந்தினர்களை அழைப்பதைக் குறைத்தல்
22. மூடிய இடங்கள், அடர்த்தியான கூட்டம், நெருக்கமான தொடர்பு ஆகியவற்றைத் தவிர்த்தல்.
23. சுகாதார வழிகாட்டலை வலுப்படுத்த தினமும் காலையில்  உடல் வெப்பநிலையை  சுய பரிசோதனை செய்தல்
24. கழிப்பறையை சுத்தப்படுத்தும் போது முகமூடியை அணிவதுடன், கொம்மோட்டினை மூடி வைத்தல்
25. ஒரு குறுகிய இடத்தில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்த்தல்.
26. நடைப்பயிற்சி மற்றும் ஓடும்போது, ​​ஒருவருக்கொருவர் சந்திக்கையில் மூலத்தைப் பேணுதலும், ​​மக்களின் எண்ணிக்கை சிறியதாக இருத்தலும்.
தடுப்பூசி முழுமையாக உருவாக்கப்பட்டு அதிகாரபூர்வ மாக பயன்பாட்டுக்கு வர குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்று ஜப்பானிய அரசாங்கக் குழுவின் தலைவர் ஷிகெரு ஓ கூறியுள்ளார்.
எதிரியை முற்றிலுமாக அகற்ற முடியாது என்பதால், வைரஸுடன் இணைந்து வாழக் கற்றுக் கொள்வது அவசியம்.
வாழ்க்கையில் புதிய விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நாம் நீண்ட நாட்கள் கொரோனா வைரஸுடன் நிம்மதியாக வாழ முடியும்.
உண்மையில், மேற்கூறிய பெரும் பாலான முறைகள் சீனாவில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இது ஒரு நீண்டகால யுத்தம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
(வட்ஸ்அப் பெட்டகத்திலிருந்து)

No comments:

Post a Comment