Search This Blog

Friday, July 11, 2014

மூளையை பயன்படுத்துங்கள் இயந்திரங்களாக மாறாதிருங்கள்!


இன்றைய காலகட்டத்தில் நாமும் நமது அடுத்தடுத்த சந்ததியூம் எமது இனத்தின் ஞானத்தையூம் அறிவையூம் மறந்து அவற்றைத் தொலைத்து வேறொரு பாதையில் சென்று கொண்டிருக்கிறௌம். தமிழர்களான நமக்கு பல வரலாற்றுப் பொக்கிசங்களை உருவாக்கி அவற்றை எம்மத்தியில் கொண்டிருந்தோம். அவற்றை நாம் நம் கை நழுவ விட்டு விட்டு பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து நாம் யாசித்துக் கொண்டிருக்கிறௌம் என்றால் சிந்திப்போம். தமிழர்களின் சிறப்புக்களும் அவர்களின் திறன்மிகு சிந்தனைகளும் அறிந்திருக்கின்றௌம். இவற்றில் எம்மிடமிருந்து அற்றுப்போனவைகளையூம் எமது அடுத்த சந்ததியினருக்கு எம்மால் கொடுக்கப்பட முடியாததுமான எம் முன்னோர்களான தமிழர்களின் சொத்துக்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.
உதாரணமாக இன்று எம்மால் கடிகாரம்(Clock) இல்லாமல் நேரத்தைக் கூறமுடியூமா? நாட்காட்டி(Calendar) இல்லாமல் இன்றைய நாளை அறிவீர்களா? இவை அன்றாடம் நித்திரை விட்டெழும்பும் போது நாம் பயன்படுத்தும் முக்கியமான விடயங்களாகும். எம் முன்னோர்கள் கடிகாரமும் நாட்காட்டியூமில்லாமல் தினசரியை சரிவரக் கழித்தார்கள். அவர்கள் தான் கடிகாரத்தையூம் நாட்காட்டியையூம் கண்டுபிடித்தார்கள். உங்களுக்குள் எழும் கேள்வி எனக்குப் புரிகின்றுத அதாவது எம் முன்னோர்கள் அடுத்த சந்ததியின் நலன் கருதி அவர்களின் செயற்பாடுகளை இலகுவாக்க தமது அறிவைப் பயன்படுத்திக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அது நல்லது தானே என்கிறீர்கள். அது சரி தான். இருப்பினும் இன்று எம்மிடையே எத்தனை பேர் கடிகாரமும் நாட்காட்டியூமில்லாமல் நேரத்தையூம் திகதியையூம் அறியூம் திறன் பெற்றிருக்கிறீர்கள் என்று சிந்தியூங்கள். எம் முன்னோர்கள் அவற்றை இலகுவாக்கவே கண்டுபிடித்தார்கள். அதற்காக கண்டறியப்பட்ட அடிப்படை அறிவையே இளக்குமளவிற்கு நாம் சிந்திக்க மறந்துவிட்டோம். 
தமிழர் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால்இ அதில் வாழ்க்கைக்குத் தேவையானவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறைகளின் தொகுப்பாகும். இதில் விஞ்ஞானம் உள்ளது. மெஞ்ஞானமும் உள்ளது. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களால் தமிழர் கலாச்சாரத்தின் உள்ளார்ந்த கொள்கைகளை இன்னும் முற்று முழுதான ஆராய்ச்சி முடிவூகளை வெளியிட முடியவில்லை என்பதம் உண்மையே. தமிழர் கலாச்சாரம் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியொன்றுடன் (Supreme Power) தொடர்புபடுத்தப்பட்டதுடன் சமயத்துடன் பின்னிப்பிணைந்துள்ளதாகக் காணப்படுகிறது அந்தவகையில் ஆன்மீக நடைமுறைகள் வழிபாட்டுமுறைகள் எல்லாம் மனித ஸ்திரநிலையைப் பேணுவதிலும் மனித ஆயூள் விருத்தியையூம் மையமாகக் கொண்டதாகவையாகும். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவூகளில் மனித மூளையின் முற்பக்கச்சோணையில்(Frontal lobe of the human Brain“காயத்ரி மந்திரம்” 108 முறை சொல்வதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி EEG வரைபடங்களுடன் விளக்கமளித்துள்ளனர். இந்த மூளையின் முற்பக்கச்சோணையே மனிதனின் புத்திக்கூர்மைக்கும் ஆளுமை விருத்திக்கும் பொறுப்பான பகுதியாகவிருக்கிறது என்பது அனைவருமறிந்ததே.
மேலும் தியானம் (Meditation)  யோகாசனம்(Yoga தமிழர் மருத்துவம் (Tamil Medicine – Siddha Medicine
 நடனம் (Dance – Bratham) சோதிடம்(Astrology) வர்மம் (Thanuology) போன்றவை உள்ளடக்கப்பட்ட 64 - கலைகளும் எம் முன்னோர்களின் தோற்றுவாய்களாகும். இவற்றின் உள்ளார்ந்த நோக்கங்களை அறிந்த முன்னோர்கள் அவற்றை திறம்பட தொகுத்துத் தந்துள்ளனர். இன்று நாம் இவற்றின் உள்ளார்ந்த நோக்கங்களைப் புரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும். இவற்றை தற்போது மேற்கத்தேயர்கள் அவற்றின் உள்ளார்ந்த நோக்கங்களை உணர்ந்தவர்களாக பின்பற்றுகிறார்கள் என்பது கண் கூடான உண்மையே. இவற்றில் தியானம்(Meditation) - மனப்பிறழ்வைத்தடுக்கும்(Anti-Stressஉள ஆரோக்கியம்

யோகாசனம் (Yoga) – உடல் உள ஆரோக்கியம் தரும்இ தமிழர் மருத்துவம் (Tamil Medicine – Siddha Medicine) – நேயற்ற நீண்டநாள் ஆரோக்கியத்தினை அளிக்கும் நடனம் (Dance – Bratham)- மூளை விருத்தியூம் (Brain development) மனஉளைச்சலைத் தவிர்க்கும் சோதிடம் (Astrology) – மன நிம்மதியளிக்கும் (Mentally Satisfaction வர்மம் (Thanuology) – தற்காப்பும்(Self-Defense மனக்கட்டப்பாடும் ; (Self-Control)தரும். 
இவ்வாறு சுருக்கமாகக் குறிப்பிட முடியூம்.
தமிழர் பண்பாட்டின் ஒருமுக்கிய பகுதியான நடனத்தை எடுத்துக் கொண்டால் பரதநாட்டியம் மூலம் மூளையின் இரு பெருஞ்சோணைகளும் (Right & Left Lobes of the Brain) விருத்தியடைகின்றன. இதை சிறுவயதிலிருந்தே பயின்றுவந்தால் அவர்களின் திறன்கள் மற்றவர்களை விட வேறுபட்டதாகவிருக்கும் என்பது ஆய்வூகளின் முடிவாகும்.
நடனக்கலைஞர்களின் நடனத்தின் நிருத்தத்தில் - தாளத்திற்கேற்ப பாதங்களும் நிருத்தியத்தில் - கைகள் செல்லுமிடத்தில் கண்களும் கண்கள் செல்லுமிடத்தில் மனமும்  சென்று உடலும் மனமும் ஒருங்கிணைந்து ஆடப்படவதால் இதன் மூலம் மூளையூம் விருத்தியடையூம் அது மட்டுமல்லாது மனஉளைச்சலையூம் தேவையில்லாத கவனச்சிதறல்களையூம் நீக்கும் என்பது உண்மையே.
மனிதனும் இப்பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறு துரும்பே. எனவே பிரபஞ்சத்தில் ஏற்படும் எந்த மாறுதல்களும் இந்த சிறு துரும்பான மனிதனிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். என்பதை அன்றேஎம் முன்னோர்கள் அறிந்து சோதிடம் என்ற பெயரில் ஆராய்ந்து தந்துள்ளார்கள். NASA விண்வெளி ஆய்வூமையம் கூட கிரகங்களின் அசைவூகளின் ஆய்வின் முடிவில் பண்டைய சோதிடத்திலுள்ள தரவூகளை உறுதிப்படுத்தியூள்ளதாகவூம் தமது விண்வெளிப் பயணங்களில் பயணத்திற்கான ஆரம்ப நேரங்களை சோதிட நூல்களினூடாகக் கணித்தே புறப்படுவதாக இந்திய சஞ்சிகையொன்றில் படித்தேன். அந்தளவிற்கு எம் முன்னோர்கள் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். 
தமிழர்களின் அணுக்கொள்கை பஞ்சபூதக்கொள்கை உடல் தத்துவங்கள் எல்லாமே தான் இன்றைய பல கண்டுபிடிப்புக்களுக்கு வழிகோலியூள்ளது. எனவே இவற்றை புதிய சந்ததியினருக்குக் கற்றுக் கொடுக்கவோ அல்லது அவற்றின் மீதான ஆர்வத்தைத் தூண்டிவிடுவதும் எமது கடமையாகும். இதையூணர்ந்து இன்றைய தொழில்நுட்பதினுடான பல அறிவியல் மாற்றங்களை புதிய தலைமுறைகளை வழிநடத்திச் செல்லுவோம்!!!!!
Dr. செ. போல்ரன் றஜீவ் 
திட்டமிடல் பிரிவூ 
மாகாண சுதேசமருத்துவத் திணைக்களம் 
கிழக்கு மாகாணம்.

No comments:

Post a Comment