( நீங்கள் கொலைகாரனா கொற்றவனை கொன்றீர்களா?
கூறுங்கள் அத்தான் கூறுங்கள்..)
வீடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தை கொன்றவன் நான்
வாழ தகுந்தவளை வாழாமல் வைத்து விட்டு
பாழும் பரத்தையினால் பண்பு தனை கொன்றவன் நான்
அந்த கொலைகளுக்கே ஆளாகி இருந்துவிட்டேன்
இனி எந்த கொலை செய்தாலும் என்னடி என் ஞானபெண்ணே….
என்னடி என் ஞானபெண்ணே…என்னடி என் ஞானபெண்ணே
ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சிக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
(அத்தான்…. அத்தான்…. உங்கள் மீது கொடும்பழி வந்திருக்கிறதே அத்தான்.
என் மீது உண்மையான அன்பிருந்தால் அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
ம்ம்.. யாருக்கும் அஞ்சாமல் சொல்லுங்கள் அதான்..)
அன்பை கெடுத்து நல் ஆசையை கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே…..
அன்பை கெடுத்து நல் ஆசையை கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
துன்பத்தை கட்டி சுமக்க துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானபெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞானபெண்ணே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
( அத்தான் உண்மையை கூறமுடியாதபடி அவ்வளவு பெரிய தவறு
என்ன செய்து விட்டீர்கள்? )
தவறுக்கும் தவறான தவறை புரிந்து விட்டு
தனிப்பட்டு போனவன் ஞானபெண்ணே…….
தவறுக்கும் தவறான தவறாஇ புரிந்து விட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே..தனிப்பட்டுப்போனவன
பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே..
(ஆ….ஆ…. அத்தான்…அத்தான்… இது என்ன அத்தான்.. இது என்னா?
உங்கள் கண்கள் எங்கே அத்தான்… உங்கள் கண்கள் எங்கே..? )
கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ
பொருத்தமான துணை இருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
பொருத்தமான துணை இருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ
( கருணையே வடிவமான தெய்வம உங்கள் கண்களை பறித்தது? )
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ
( நீதி நிலை பெற என் நெற்றியில் குங்குமம் திகழ
உண்மையை கூறுங்கள்… உங்கள் மனைவி கேட்கிறாள்..
என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறதத்தான்… )
சிங்காரம் கெட்டு சிறைபட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்.. சம்சாரம் ஏதுக்கடி..
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி………
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி தங்கம் … மன்னிக்க கோடாதடி..
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
No comments:
Post a Comment