Search This Blog

Friday, May 4, 2012

"சொன்னது நீதானா"


நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற "சொன்னது நீதானா"பாடலின் கம்போசிங்காக படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன், இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கவிஞர் கண்ணதாசனின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்.

எம்.எஸ்.விஸ்வநாதனோ எம்.ஜி.ஆரின் "பணத்தோட்டம்" பட ரீ-ரிக்கார்டிங்குக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார். ஸ்ரீதரோ "இந்தப் பாடலை நீங்க கம்போஸ் பண்ணிக் கொடுததே தீரவேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டாராம். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து எம்.எஸ்.வி. “என்னய்யா இந்த குடிகாரரோடு இதே வேலையா போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைய மாட்டேங்கிறார்” என்று கத்தி விட்டாராம்.

இதை கண்ணதாசனிடம் யாரோ போட்டுக் கொடுத்துவிட,"விசு....என்னை நீ குடிகாரன்னு திட்டினியாமே! அப்படியா" என்று சொல்லிக்கொண்டே அவர் எழுதிய பாடல்தான் புகழ் பெற்ற "சொன்னது நீதானா.... சொல்...சொல்...சொல் என்னுயிரே" .பாடல் முடிந்ததும் விஸ்வநாதன் கண்ணதாசனைக் கட்டித் தழுவி மன்னிப்பு கேட்டுள்ளார் .

No comments:

Post a Comment