Search This Blog

Monday, May 28, 2012

புரட்சிக் கவிஞர்


புரட்சிக் கவிஞர் , ஸ்ரீ ராமானுஜர், காளமேகம் , சதி சுலோச்சனா. சுபத்ரா போன்ற புராணப் படங்களுக்கு பாடல்களும் ,ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி , பொன்முடி போன்ற படங்களுக்கு கதை வசனமும் எழுதினார் .
" புராண - இதிகாசங்களை எதிர்க்க வேண்டிய நீங்களே , இது போன்ற கதை , வசனம் எழுதலாமா ? " என்று பலரும் வினவிய
போது , " மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்று வரும் திரைத்துறையில் ஒரு நுழைவு ஏற்படுத்தி இருக்கிறேன் . " பிராண நாதா " , ஸ்வாமி , சஹியே போன்ற சொற்களை நீக்கி , ' அத்தான் ' , தோழி , குருவே என்று எழுதியிருக்கிறேன் . அசுரர்களாகக் காட்டப்பட்டு வந்தவர்களை நல்லவர்களாகப் படை த்திருக்கிறேன். தொடக்க நிலையில் இதைத்தான் செய்ய முடியும் . போகப் போக நம் கருத்துக்களை முழுமையாய்ப் புகுத்தலாம் ! " என்றாராம் புரட்சிக் கவிஞர் .

No comments:

Post a Comment