தற்ப்போது ஈழத்தின் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசிக்கும் கவிக்குயில் "பாமினி "அவர்கள் தென் இந்திய தமிழ் சினிமாவில் ஈழத்தின் முதல் பெண்பாடலாசிரியராக இசையமைப்பாளர் ரவிப்பிரியன் இசையில் வெளிவர இருக்கும் "சதா" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகின்றார்.
பாமினி அவர்களுக்கு தமிழிதழ் இணையம் சார்ப்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அடுத்த திரைப்படமாக டெல்லி கணேஸ் இன் மகன் அறிமுகமாகும் " சிந்தை மயங்குதடி "என்ற திரைப்படத்தில் இவரது பாடல்கள் இடம்பெறுவதற்க்கான பேச்சு வார்த்தை இடம்பெற்றுக் கொண்டு இருக்கிறது. அதே நேரம் இவரது பாடல் வரிகளிலும் இசையமைப்பாளர் ரவிப்பிரியன் இசையிலும் திப்பு, ஹரிச்சரண், சிறினீவாஸ் , பிரியா, சுவேதா மோகன் ,சத்யன், ஹரிணி ,மது பாலகிருஸ்னன், உசாராஜ், முகேஸ்.ஆகியோர் குரலிலும் மிகப் பிரமாண்டமான வெளியீடாக யூன் மாதம் வெளிவர இருக்கின்றது என் காதல் நீ என்ற இசைப் பேழை
பல இசைப்பேழைகளையும், இணையத் தளங்கள் ஊடகவும் கவிதைகள் மூலம் பிரபலமடைந்த எஸ்வீஆர் பாமினி அவரது தென் இந்திய தமிழ் சினிமாவின் வருகைக்கு இணையத்தளங்களும் அவரது திறமையும் காரணம் என தென் இந்திய இசையமைப்பாளர் ரவிப்பிரியன் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment