திருமணத்திற்கு முன் காதல்...
- நம்பிக்கை இழக்காதே. அவநம்பிக்கையானது அறிவு, ஒழுக்கம் ஆகியவைகளுக்கு வீழ்ச்சியாகும். - இக்பால்
- துன்பம் இல்லாமல் வெற்றி இல்லை. முயற்சி இல்லாமல் பெருமை இல்லை. -பென்
- அறிவோடு படிப்பவனே சிறந்த மேற்கோள்களைக் காட்டமுடியும். - லூயிசாமேரி
- பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடமையின் முழு அடையாளம். - ஸிஸரோ
- அஞ்சாதவனும், ஆசைப்படாதவனும் உண்மையான உயர்ந்த மனிதன். -ஹிஜிஸ்
- அறிவுரை, தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் மருந்து போன்றது. - ஜோஷ்பிஸ்லிங்ஸ்
- கவலையுடன் விருந்து உண்பதைக் காட்டிலும், ஒரு கவளம் அமைதியாக உண்பதே மேல். -ஈசாப்
- தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாயில்களும் திறந்து வரவேற்பு அளிக்கும். -எமர்சன்
- கடுமையான உழைப்பைத் தவிர, வெற்றிக்கு வேறு ரகசியம் ஏதுமில்லை. - டர்னர்
- அறிவு காட்டும் வழியில் மட்டும் செல்லாதே. ஆன்மா கூறும் வழியில் செல். - டால்ஸ்டாய்
- சோம்பேறித்தனத்தில் மூழ்கியிருக்கும் ஒருவனிடம் எப்போதும் ஏக்கம் குடி கொண்டிருக்கும். -கார்லைல்
- மனிதனிடமுள்ள வற்றாத ஆசைகள்தாம் அவன் வாழவேண்டுமென வற்புறுத்துகின்றன. -காங்கிரி
- அறியாமை ஒருவனுக்கு ஆசிர்வாதமானால், புத்திசாலியாய் இருப்பவன் முட்டாள் என்றாகிவிடுமே. -தாமஸ்கிரே
- உண்மைகளைப் போற்றுங்கள். தவறுகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் - வால்ட்டேயர்
- தாமரையிலையிலே உருண்டோடும் பனித்துளி போன்றது மனித வாழ்க்கை. -தாகூர்
- திருமணத்திற்கு முன் காதல் என்பது முடிவு பெறாத நூலுக்கு மிகச் சிறிய முகவுரை போன்றது. -தாமஸ்புல்லர்
- ஏழையை உலகம் மதிப்பதில்லை. பணக்காரனைக் கண்டு பொறாமைப்படுகிறது. -ஹென்றி போர்டு
- வலி உடலை வதைக்கிறது. விலை மனிதனை வதைக்கிறது. -பெஞ்சமின் பிராங்க்ளின்
- சிறிய விசயங்களில் பொறுமை காட்டாவிட்டால், பெரிய காரியங்கள் கெட்டுப் போகும். - கன்பூஷியஸ்
- ஆசையின் தாகம் முழுக்கத் தீர்வதுமில்லை. ஒருபோதும் தணிவதுமில்லை. -நிசரோ
- வாழத்துடிக்கும் ஆசை முதியோர்க்கு இருப்பது போல் வேறு யாருக்கும் இருக்காது. -மேரிஸ்டோபீலப்
- வறட்டுப் பிடிவாதம் உள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்டநஷ்டங்களே ஆசிரியர்கள் -ஷேக்ஸ்பியர்
- நண்பனைப் பாராட்ட வேண்டியிருந்தால் பலர் முன்னிலையில் பாராட்டுங்கள். -நேரு
- தவறு ஒன்றுதான் அரசாங்கத் தயவை வேண்டும். உண்மைக்கு அது வேண்டியதில்லை. -தாமஸ் ஜெபாஸன்
- முயற்சியினால் கிடைக்கும் பயனே இன்பங்கள் அனைத்திலும் மிக இன்பமானது. -லாவனார்கூஸ்
No comments:
Post a Comment