கீழ் உள்ள இரண்டு சூழ்நிலைகளில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்,
முதலாவது
: உங்கள் உடல் மருத்துவமனை படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளதை உங்களால் வெளியே இருந்து பார்க்க முடிந்தால்.
இரண்டாவது:
உங்களுக்கு இருதய அறுவை சிகிச்சை, Anesthesia கொடுக்கப்பட்டு மயக்கமடைய செய்து அறுவை சிகிச்சை ஆரம்பமாகின்றது, இடையிலேயே விழித்துக் கொள்கிறீர்கள்,ஆனால் உங்கள் உதட்டை கூட உங்களால் அசைக்க முடியவில்லை,உயிர் போகின்ற வழியிலே முழு அறுவை சிகிச்சையும் நடக்கின்றது,
________________________________________________________________________________________________
நான் இறந்து கொண்டிருப்பதை என்னால் மிதந்தபடி பார்க்க முடிகின்றது,மருத்துவர்கள் என் உயிரை காப்பாற்ற போராடிக்கொண்டு இருக்கிறார்கள்,திடிரென்று ஏற்பட்ட கோல்டன் ஒளி என்னை அழைக்கின்றது,அதன் வெளிச்சம் மிக அதிகம் ஆனால் என்னால் கண் கூசாமல் அதனைப் பார்க்கமுடிகின்றது,என்னை சுற்றி நிறைய பேர் என்னை மாதிரியே மிதக்கின்றனர்,அந்த ஒளி என்னிடம் பேசுகின்றது,நீ இன்னும் மரணத்திற்கு தயாராகவில்லை,அவசரப் படாதே சென்றுவிடு என தெய்வீக குரலில் ஆணை இடுகின்றது,பின்பு சிறிது நேர மயக்கம்....... பின்பு உடலில் தாங்கமுடியாத வலி,உயிர் உடலோடு ஒட்டிவிட்டது,
இது கொடூரமான ஜெல்லி மீனால் தாக்கப்பட்டு மருத்துவர்கள் மிகுந்த போராட்டதிற்குப் பின் இறந்து விட்டார் என முடிவு செய்த பின்பு,20 நிமிடத்திற்கு பிறகு உயிருடன் எழுந்த நியூசிலாந்து நாட்டைக் சேர்ந்த lan McCormack கூறியவை,இதனை ஆங்கிலத்தில் Near death Experience சுருக்கமாக NDE என அழைக்கின்றோம்,NDE வைப் பற்றி Raymond A Moody அடிச்சு துவைத்து காயப்போடுமளவுக்கு ஆராய்ச்சி செய்துள்ளார்,மரணத்தின் இறுதிவரை சென்று வந்த சுமார் 150 பேரின் அனுபவங்களை life after life எனும் பெயரில் புத்தகமாக வெளிட்டுள்ளார்,இப்பொழுது நாம் இந்த புத்தகத்தைப் பற்றி பார்க்கபோவது இல்லை,NDE மையமாக வைத்து சமீபத்தில் வெளியான த்ரில்ளீர் Insidious திரைப்படத்தினைப் பற்றி பார்க்கப்போகின்றோம்,
____________________________________________________________________________________________________
saw பட வரிசைகளின் மூலம் மிக பிரபலமான james wan-னின் அடுத்த மிரட்டலான படைப்பு Insidious,நீங்கள் இந்த படத்தினை கண்டிப்பாக பார்ப்பீர்களானால் இதற்கு மேல் படிக்கவேண்டாம்,படம் மிக அருமையானது,த்ரில்ளீர் பிரயர்களுக்கு மிக நாட்களுக்கு பிறகு வந்துள்ள மிரட்டலான படம்,கதை தெரியாமல் பார்த்தால் மிரட்டலை உணர்வீர்கள் என்பது என் கருத்து,இல்லை படித்துவிட்டு தான் போவேன் என்றால்,ஓகே... ரைட்.... வாங்க போலாம்.
படம் ஆரம்பம் ஆனதும் paranormal மாதிரி இருக்கே என்று ஒரு எண்ணம் ஏற்ப்படுகின்றது,ஆனால் அது மாதிரி ஆற அமர இல்லாமல்,ஆரம்பம் முதலே நம்மை அரண்டு ஓட வைக்கிறார்கள்,தாங்கள் புதியதாக வாங்கிய வீட்டிற்கு ஒரு தம்பதியனர் தங்கள் மூன்று குழந்தைகளுடன் குடிபெயருகின்றனர்,வீட்டில் ஆரம்பம் முதலே தங்களை தவிர வேறு யாரோ இருப்பதை உணருகின்றாள் ஜோஷ்(குடும்பத் தலைவி),டெல்டன்(மகன்) ஒருநாள் வீட்டின் பரணில் ஏதோ சத்தம் வருவதை கேட்டு மேல் சொல்கிறான்,அறை இருட்டாக இருப்பதால் விளக்கைப் போடுவதற்காக ஏணியில் ஏறும் டெல்டன்,ஏணி முறிந்து கீழே விழுகின்றான்,அப்பொழுது அந்த அறையீன் ஓரத்தில் யாரோ இருப்பதைப் பார்த்து அலறுகின்றான்,ஜோஷ் மற்றும் ரேனாய்(கணவர்) வந்து காப்பாற்றுகிறார்கள்,தூக்கிக்கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைக்கிறார்கள்,அடுத்த நாள் காலையில் டெல்டன் எழுந்திருக்கவேவில்லை,அடித்து பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் டெல்டனை பரிசோதிக்கும் மருத்துவர் விவரிக்கமுடியாத கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறுகிறார்,மூன்று மாத சிகிச்சைக்குப் பின்பும் குணம் ஆகாததால் வீட்டிற்க்கு கொண்டு செல்கிறார்கள்,அதன் பின்பு நமது பல்சை எகிற வைக்கின்ற மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றது,வீட்டில் வேறு யாரோ இருப்பதை வெவ்வேறு சூழ்நிலைகளில் வீட்டில் உள்ள அனைவரும் பார்க்கிறார்கள்,அதுவும் கோமா நிலையில் இருக்கும் டெல்டனை சுற்றியே அந்த அனுமான்சிய சக்தி இருப்பதை உணருகிறாள் ஜோஷ்,வீட்டில் எதோ பெரிய பிரச்சனை இருப்பதை உணரும் ரேனாய் உடனே வீட்டை மாற்றுகிறான்,அதற்குப் பிறகு அந்த பிரச்சனை அதிகமாகின்றது,
ஜோஷ் தாயின் நெருங்கிய தோழி எலிஸ்,இது மாதிரியான அனுமான்சிய பிரச்சனைகளை தீர்த்துவைப்பவள்,தனது உதவியாளர்களுடன் அந்த வீட்டிற்கு வருகிறாள்,டெல்டன் இருக்கும் அறைக்கு செல்லும் எலிஸ் அங்கு அறையின் மேற்புறம் ஏதோ இருப்பதை பார்க்கிறாள்,தனது உதவியாளர்களிடம் விவரிக்க அவன் அதனை படமாக வரைகின்றான்,இறுதியில் அது சிகப்பு நிறம் முகத்தினைக் கொண்ட ஒரு கருப்பு உருவமாகின்றது,
எலிஸ்க்கு சிறிது நேரத்திலே அங்கு நடப்பவைகள் புரிந்து விடுகின்றது,ஜோஷ் மற்றும் ரேனாய் இருவரிடமும் எலிஸ் நடப்பவைகளை விவரிக்கிறாள்,நீங்கள் நினைப்பது போல் வீடு பிரச்சனை கிடையாது,உங்கள் மகன் தான் பிரச்சனை,astral projection எனும் முறையில் இறந்தவர்களுடன் நாம் தொடர்பு கொண்டு பேசலாம்,உங்கள் மகன் இயல்பாகவே தூக்கத்தில் கனவு என்று நினைத்துக்கொண்டு சிறுவயது முதல் astral projection முறையில் அவர்களுடன் பேசி வருகின்றான்,அப்படி செய்ததன் விளைவு உங்கள் மகன் உடல் இங்கு உள்ளது அவன் ஆன்மா எங்கோ திரும்பி வர இயலாத வேறு இருண்ட உலகத்தில் மாட்டிக்கொண்டுள்ளது,அந்த நேரத்தில் உங்கள் மகன் உடலை இறந்த சில ஆவிகள் கைப்பற்ற நினைக்கின்றன,இதற்கு ஒரே தீர்வு உங்கள் மகனை திரும்ப அழைக்க வேண்டும்,
மகனை திரும்ப அழைக்கும் முயற்சிக்கிறார்கள்,,அந்த முயற்சி படு தோல்வி அடைகின்றது,இதற்கு இடையில் அந்த ஆவிகளின் தொல்லை அதிகமாகின்றது,இறுதியில் ஒரு உண்மையை எலிஸ் உடைக்கின்றாள், இந்த பழக்கம் டெல்டனுக்கு அவனது தந்தை இடமிருந்து தான் சென்றுள்ளது,தந்தைக்கும் சிறுவயதில் இதுபோல் ஆகி குணமான்வன் தான் என்கிறாள்,இதனை மறுக்கும் ரேனாய் (தந்தை),எனக்கு அது போல நடந்ததாக எந்த ஞாபகங்களும் இல்லை என்கிறான்,ரேனாயின் தாய் அவன் சிறுவயது புகைப்படங்கள் சிலவற்றை காண்பிக்கின்றாள்,அதில் ஒரு விசித்திரமான் வயதான பெண் உருவம் அவன் அருகின் நிற்பது போல இருக்கின்றது,பின்பு அவள் தாய் விவரிக்கின்றாள்,உனக்கும் இந்த பழக்கம் சிறுவயதில் இருந்ததாகவும் பின்பு உன்னையும் நாங்கள் திரும்ப அழைத்தோம் என்கிறாள்,
உனது மகனை உன்னால் மட்டுமே அந்த கருப்பு உலகத்திற்குள் சென்று அழைத்து வர முடியும் என்கிறாள் எலிஸ்,முதலில் மறுக்கும் ரேனாய் பின்பு சம்மதிக்கின்றான்,அதற்க்குப் பிறகு நடப்பவைகள் அதகளம்,அவற்றை நீங்கள் படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்,saw படத்தின் இறுதி காட்சி மொத்த படத்தையும் திருப்பி போடும் அல்லவா,அதே மாதிரியான இறுதி காட்சி இதிலும் உள்ளது,நீங்கள் எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் அரளப் போவது உறுதி நண்பர்களே,
இப்போ நாம நான் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது சூழ்நிலைக்கு வருவோம், Joby Harold இயக்கத்தில் வந்துள்ள awake படத்தின் கதை தான் அது.
No comments:
Post a Comment