நாம் நம் செயல்களில் வாழ்கிறோம், ஆண்டுகளில் அன்று;
சிந்தனைகளில் வாழ்கிறோம்,மூச்சு விடுவதில் அன்று;
உணர்ச்சிகளில் வாழ்கிறோம், கடிகாரம் காட்டும் மணிகளில் அன்று;
நேரத்தை நாம் இதயத் துடிப்புகளைக் கொண்டு கணக்கிட வேண்டும்.
எவன் மிக அதிகமாகச் சிந்தனை செய்கிறானோ, தலை சிறந்த செயல்களைச் செய்கிறானோ
அவனே அதிகமாக வாழ்பவனாவான்.
தோட்டக்காரன் தோட்டத்திற்குள் வந்ததும் மொட்டுக்கள் தமக்குள்ளேயே பின்வருமாறு
பேசிக்கொள்கின்றன."இன்று மலர்ந்த மலர்களைக் கொய்துவிட்டான்.நாளை
நமது முறை வரும்,அப்படியே நம்மையும் கொய்துவிடுவான்.மனித வாழ்க்கையும் இப்படியே.
மனிதனுடைய வாழ்க்கை செடியிலிருக்கும் இலைகளைப் போன்றதுதான்.
நாம் எப்போதும் வாழ்வதில்லை.வாழவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
கொஞ்சம் வேலை...கொஞ்சம் உறக்கம்... கொஞ்சம் காதல்...எல்லாம் முடிந்துவிடுகின்றன.
வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்தது அல்ல. நாம்தான் சிக்கல் நிறைந்தவர்களாக இருந்து வருகிறோம்.
வாழ்வில் வெகு முக்கியமாக கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம் எவ்வாறு வாழ்வது என்பதே.
நீயும் வாழ்;மற்றவர்களையும் வாழவிடு.ஏனெனில் பரஸ்பர
பொறுமையும் அனுசரிப்புமே வாழ்க்கையின் விதியாகும்.திருக்குர் ஆன்,பைபிள்,ஜெந்தவஸ்தா,
கீதை முதலானவை அனைத்திலிருந்தும் நான் கற்றுக் கொண்ட பாடம் இதுவேயாகும்.
பிறருக்காக வாழுகின்ற வாழ்க்கைதான் மிகச் சிறந்த வாழ்க்கை.
தனக்கென்று வாழ்பவன் விலங்கு. பாதி தனக்காகவும்,பாதி பிறருக்காகவும் வாழ்பவன் மனிதன்.
பிறருக்காகவே வாழ்பவன் தேவன்.
வாழ்க்கை என்பது அதி அற்புதமானது.நான் வாழ்ந்திருக்கிறேன்.
வாழ்க்கை என்பது சுமையல்ல;அது ஒரு வரம்.ஏ.பி. ஜே. அப்துல் கலாம்
No comments:
Post a Comment