Search This Blog

Tuesday, April 19, 2011

Maampoove chiRu mainaave (மாம்பூவே சிறு மைனாவே)

கிராமிய இசையிலும் கிராமிய பாடல் வரிகளிலும் அழகான குரல்கள் தெரிவிலும் அருமையான  பாடல்.

திரைப் படம்: மச்சானைப் பார்த்தீங்களா (1978)
இசை: சந்திர போஸ்
நடிப்பு: சிவகுமார், ஸ்ரீதேவி
இயக்கம்: V C குக நாதன்



மாம்பூவே...சிறு மைனாவே...
எங்க ராஜாத்தி ரோஜா செடி..
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்..
நினைக்கையில் இனிப்பாக இருக்குறா..ஆ ஆ ஆ ஆ
நெருங்கையில் நெருப்பாக கொதிக்கிறா

புத்தம் புதுசு வெள்ளி கொலுசு
சத்தங்கள் கொண்டாட
சித்திர பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு
சங்கீத பண் பாட...
கட்டு கருங்குழல் பட்டு தளிருடல் பின்புறம் நின்றாட
கொத்தடி சேலை கட்டிய வண்ணம் பல்லக்கு ஒன்றாட
அழகான மான் அதற்காக நான்
பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மாம்பூவே சிறு மைனாவே
நான் மச்சானின் பச்சை கிளி
தொற்றிக்கொள்ள தோள் கொடுத்தான்
எனக்கது சுகமாக இருக்குது...ஆ ஆ ஆ
என் மனம் எங்கெங்கோ பறக்குது

மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து
மன்னவன் பூச்சூட
மூக்குத்தி வண்ணம் மின்னுர கன்னம்
மஞ்சத்தில் முத்தாட
அந்தி கருக்களில் ஆற்றங்கரையினில் சந்திக்க சொன்னதென்ன..
என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன் சிந்திச்சி நின்னதென்ன
மடல் வாழை மேல்... குளிர் வாடை போல்
அவனோடு நான் ஆடும் பொழுதெல்லாம் தேன்

மாம்பூவே சிறு மைனாவே
நான் மச்சானின் பச்சை கிளி
தொற்றிக்கொள்ள தோள் கொடுத்தான்
எனக்கது சுகமாக இருக்குது...ஆ ஆ ஆ
என் மனம் எங்கெங்கோ பறக்குது
என் மனம் எங்கெங்கோ பறக்குது
என் மனம் எங்கெங்கோ பறக்குது
என் மனம் எங்கெங்கோ பறக்குது
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

Read more: http://asokarajanandaraj.blogspot.com/search?updated-max=2011-09-02T05:10:00-07:00&max-results=7#ixzz1ZgpkTbdE

No comments:

Post a Comment