"மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்து பார். ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது கடவுள் இருக்கிறான் என்பதே!"
"எதைச் சிந்திக்கிறாய் என்பதிலல்ல, எப்படி சிந்திக்கிறாய் என்பதில்தான் புதிய கருத்துக்கள் வெளிவருகின்றன."
"அமைதியைத தேடி எங்கெங்கோ அலைந்தேன்.
கால்கள் வலித்தன.
ஓரிடத்தில் அமர்ந்தேன்.
அமைதி அங்கேயே இருப்பது அப்போதுதான் தெரிந்தது."
"தண்டனையை ஏற்றுக் கொள்ளுங்கள்: பரிசு வரப்போகிறது.
பரிசை ஏற்றுக் கொள்ளுங்கள்: தண்டனை வரப்போகிறது.
எது வந்தாலும் அமைதியாக இருங்கள்; எதுவுமே வராது."
"நீங்கள் சொன்ன விஷயம் பொய்யாகிவிட்டால் அதற்காக வருந்தாதீர்கள்.
ஏனென்றால் அதன்மூலம் ஒரு உண்மையை நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள்."
"அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன்.
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை.
தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்."
என்றும் அன்புடன்,
கோ.வரதராஜன்.
Related Posts : Good to Read
No comments:
Post a Comment