Search This Blog

Thursday, April 28, 2011

எச்.ஐ.வி. எப்படி எய்ட்ஸாக மாறுகிறது?

எச்.ஐ.வி. எப்படி எய்ட்ஸாக மாறுகிறது?

search
எச்.ஐ.வி. எப்படி எய்ட்ஸாக மாறுகிறது?   , எச்.ஐ.வி. கிருமி மனிதனின் உடலில் நுழைந்த உடனே சிடி-4 மற்றும் மேக்ரோபாஜ், நரம்பு செல் போன்ற அணுக்களை அணுகி அவற்றினுள் சென்றுவிடுகிறது. இந்த வகை செல்கள்தான் நோய் கிருமிகளை அழிக்கும் செல்கள்.

அவற்றினுள் நுழைந்த எச்.ஐ.வி. கிருமி அவற்றினுள் பல்கிப் பெருகுகின்றது. இத்தகைய பெருக்கம் அதிகமாகும் போது அந்த செல் (நோய் தடுப்புச் செல்) வெடித்து அதிலிருந்து இலட்சக் கணக்கான வைரஸ் கிருமிகள் வெளிவருகின்றன. அப்படி வெளிவரும் வைரஸ் கொல்லப்பட்டாலும் சில வைரஸ் கிருமிகள் புதிய செல்களுக்குள் ஊடுருவி விடுகின்றன. இப்படியாக சிடி-4 செல்களின் எண்ணிக்கை உடம்பில் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது.

தற்போதைய கணக்குப்படி ஒரு நாளைக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவரின் உடலில் நூறு கோடி வைரஸ் கிருமிகள் உருவாகிக் கொல்லப்படுகின்றன. மற்றும் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு விழுக்காடு சிடி-4 லிம்போசைட்டும் உற்பத்தியாகி அழிகிறது. இவை இரண்டின் அளவை வைத்தும்தான் எச்.ஐ.வி. நோயின் தீவிரத்தை நாம் கண்டறிய முடியும்.

சிடி-4 செல் அளவு உடலில் குறைந்தால் பல நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதாவது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. இந்த நிலையே எய்ட்ஸ் எனப்படுகிறது.

No comments:

Post a Comment