Search This Blog

Wednesday, April 27, 2011

வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு மற்றும் திருவிழிப்பு விழாவில் பங்
நாகப்பட்டினம், ஏப். 24: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி, பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தவக்காலத்தின் இறுதி நிகழ்ச்சிகளாக கடந்த வியாழக்கிழமை மாலை பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசுநாதர் தனது சீடர்களின் பாதங்களைக் கழுவியதை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி, வழிபாடுகள், திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், சனிக்கிழமை காலை முதல் இரவு சுமார் 10.30 மணி வரை பேராலயத்தில் எவ்வித வழிபாடும் மேற்கொள்ளப்படவில்லை.

சனிக்கிழமை இரவு சுமார் 11 மணிக்கு திருவிழிப்பு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. திருப்பலி, மறையுரை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு, சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதர் உயிர் பெற்று எழுந்ததை அறிவிக்கும் விதமாக, பேராலயக் கலையரங்கின் மேல் தளத்தில் வாணவேடிக்கைகளுடன் இயேசுநாதரின் திருச்சொரூபம் பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

அப்போது, பேராலயத்தைச் சுற்றிக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மெழுகுவர்த்தியை உயர்த்திக் காண்பித்து வழிபட்டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ், மலையாளம், கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெற்றது.

புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment