ஜீரண மண்டலத்தில் உணவுக் குழாய், இரைப்பை, குடல் ஆகியவை நான்கு வளையச் சவ்வுகளாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. உள்வளையத்தில் உள்ள சவ்வுகளில் புற்றுநோய் ஆரம்பித்து வெளியில் உள்ள நிணநீர் சுரப்பிகளுக்குப் பரவி, பின்பு கல்லீரல் மற்றும் எலும்புகளுக்கும் பரவும் தன்மையுடையது. இதை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் அறுவைச் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும். முற்றிய நிலையில் அறுவைச் சிகிச்சை ஆபத்தானது.
சி.டி. ஸ்கேனை விட சிறந்தது: புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் சி.டி, ஸ்கேனைவிட எண்டோ அல்ட்ரா சோனோகிராபி (Endo Ultra Sonography) சிறந்தது. புற்றுநோய் எந்த வளைவுச் சவ்வு வரை பரவி உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்க இக் கருவியாக உதவியாக இருக்கும். இக் கருவி மெடிந்தியா மருத்துவமனையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுகுடல் நோய்களைச் சாதாரண எண்டோஸ்கோப்பி கருவி மூலம் பார்க்க முடியாது. ஆனால் தற்போது விடியோ எண்டிரோஸ்கோப்பி (Video Enteroscope) கருவி மூலம் சிறுகுடலில் உள்ள அல்சர், காச நோய்க் கட்டிகள், புற்றுநோய் போன்றவற்றைக் கண்டுப்பிடிக்க முடியும். இக் கருவியும் மெடிந்தியா மருத்துவமனையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment