Search This Blog

Wednesday, April 27, 2011

ஓசோன் ஓட்டையால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள்

ஆராய்சி செய்தி

[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 10:30.45 மு.ப GMT ]
பருவ நிலை மாற்றங்களுக்கு ஓசோனில் விழும் ஓட்டைகள் முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த ஓசோன் துளைகள் பூமியின் தென் துருவப் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்த ஆய்வு அறிக்கை அறிவியல் பத்திரிக்கையின் 21வது இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கொலம்பியா பல்கலைகழகத்தின் ஸ்கூல் ஆப் இன்சினியரிங் ஆய்வாளர்கள் ஓசோன் ஓட்டையால் துருவப் பகுதி பாதிப்பை விளக்கி உள்ளனர்.
பூமிப்பகுதியானது வடதுருவம், தென்துருவம் என ஒரு கற்பனைக் கோடு மூலம் பிரிக்கப்படுகிறது. இதில் ஓசோன் படல ஓட்டையால் தென் துருவ அரை வட்டப் பகுதி முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பாதிப்பால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சூரியனில் இருந்து தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களை ஓசோன் படலம் உறிஞ்சுகிறது. இதனால் பூமியில் உள்ள உயிர்களுக்கு அபாயம் ஏற்படாத நிலை இருந்தது. கடந்த அரை நூற்றாண்டாக மனிதர்களால் உற்பத்தி ஆன அதி நவீன பொருட்களால் ஓசோன் மண்டலம் பாதிக்கப்படுகிறது.
1989ம் ஆண்டு மாண்ட்ரீல் ஒப்பந்தப்படி குளோரோ ப்ளோரசண்ட் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் தற்போது வரை 196 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத நேரத்தில் ஓசோன் படலம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment