Search This Blog

Tuesday, April 26, 2011

கண்ணதாசன் பதில்கள்


 
Join Only-for-tamil
கே: உங்களுடைய கருத்துக்களுக்கு அடிப்படையாக இருந்து சிந்திக்க வைத்தவர் யார்?
பதில்: வறுமை, வசதியின்மை, ஊராரின் கேலிப்பேச்சு - இம்மூன்றுமே
   
கே: பெண்களையே கவிதை வடிக்கிறீர்களே..எங்கே ஆண்களை பற்றி சிறு கவிதை பாடுங்கள்...
பதில்: என்னுடய மூதாதையரை விட நான் கெட்டிக்காரன் அல்ல...ஆண் என்பவனே அபத்தம். அவனைப் பற்றி பாடுவதற்கு என்ன இருக்கிறது?  

கே: தங்கள் பாடல்களை கேட்கும் போது என் மனதில் உயர்ந்து நிற்கும் தாங்கள், தங்கள்
கதைகளை படிக்கும் போது மிகவும் இறங்கிவிடுகிறீர்களே...இக்குறைை நிவர்த்திக்க முயலுவீர்களா?
பதில்: பாடல்கள் கற்பனையில் பிறக்கின்றன. கதைகள் அனுபவத்தில் பிறக்கின்றன.
கற்பனைகளை விட அனுபவம் எப்போதும் அசிங்கமாகத்தான் இருக்கும்

கே: உங்களுக்கே பிடிக்காத கெட்ட குணங்கள் உங்களிடத்தில் உண்டா?
பதில்: நிறைய இருப்பதால்தான் தடுமாறுகிறேன். நண்பர்களை நம்புவது, அரசியலில்
நாணயத்தோடு இருப்பது, யார் மீதும் இரக்கம் காட்டுவது - இவற்றை விட மட்டமான
கெட்ட குணங்கள் என்ன இருக்கிறது?
 
கே: தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிக்கும், தேர்தலில் வென்றுவிட்ட அரசியல்வாதிக்கும் என்ன வேறுபாடு?
பதில்: நிற்பவன் தனக்குத் தானே எமன்! வெற்றி பெற்றவன் பிறருக்கு எமன்.

கே: அரசியல் மேடைக்கும், இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: அரசியல் மேடை, மனிதனை முட்டாளாக்குவதற்காகப் போடப்படுவது; இலக்கிய மேடை, முட்டாள்தனத்தைத் தெளிய வைப்பதற்காகப் போடப்படுவது.

கே: இப்போதுள்ள கவிஞர்களில் தங்களுக்குப் பிடித்தமான கவிஞர்கள் உளரா?
பதில்: நிறையப்பேர் இருக்கிறார்கள். சீதை பத்தினி என்றால் அநுசூயை
வருத்தப்படுவாளே?  மற்றவர்கள் வருத்தத்திற்கு அஞ்சி பெயர்களைச் சொல்லாமல்
விடுகிறேன்.

கே: இந்தியாவிலேயே சிறந்த நடிகர் யார்?
பதில்: பி.யு. சின்னப்பாதான். ஏனென்றால் கடந்த இருபத்தைந்து வருடங்களாக நான் படமே பார்த்ததில்லை.
நன்றி
பொறிஞர் வி.நடராஜன்

No comments:

Post a Comment