ஒரு கடிகாரம் வைத்திருப்பவனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் வைத்திருப்பவனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
எங்கே விழுந்தாய் எனப் பார்க்காதே,
எங்கே வழுக்கினாய் என யோசித்துப் பார்.
பின்கண்ணாடி வழியாக நடந்ததைப் பார்ப்பதைவிட,
முன்கண்ணாடி வழியாக முன்னே வருவதைப் பார்.
நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள்.
ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
முன்நோக்கிச் செல்லும் போது கனிவாயிரு.
ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்..
யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?
இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
மகிழ்ச்சிக்கென நீ வீணாக்கிய தருணங்களெல்லாம்
வீணானவையல்ல.
பயமில்லாமை தைரியமல்ல. பயப்படும் நேரங்களிலும்
சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.
எதிர்காலத்தைச் சரியாகக் கணிப்பதற்கு,
அதை நாமே உருவாக்க வேண்டும்.
No comments:
Post a Comment