|
குழந்தைகளை அறிவாளியாக மாற்றும் இசைப்பயிற்சி |
|
சிறுவயதில் பல மணி நேரம் இசைப்பயிற்சி எடுப்பது குழந்தைகளுக்கு மிகுந்த சிரமத்தை தரலாம்.ஆனால் இந்த இசைப்பயிற்சியை பெறும் குழந்தைகள் வயதான காலத்தில் மிகச் சிறந்த அறிவாளிகளாக திகழ்கிறார்கள் என ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இளவயதில் பியானோ, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை பயிற்சி பெறும் நபர்கள் வயதான தருணத்தில் மிகவும் புத்திக்கூர்மையுடன் இருப்பதாக அமெரிக்க உளவியல் சங்க இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனாஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர் பிரண்டா ஹென்னா பிளாடி கூறுகையில்,"இளவயதில் மேற்கொள்ளும் இசைப்பயிற்சி வயதான காலத்தில் மூளை நரம்புகளில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. சிறுவயது இசைப்பயிற்சி மூளையை துடிப்புடன் வைத்திருக்கிறது. இதனால் மற்றவர்களை விட இசைப்பயிற்சி பெற்றவர்கள் அறிவு நுணுக்கத்துடன் செயல்படுவதை காண முடிகிறது" என்றார்.
இசை மனதுக்கு இதம் அளித்து பதட்டத்தை குறைக்க உதவுகிறது. ஆழ்ந்த தூக்கத்தை இரவில் பெறவும் உதவுகிறது. மெல்லிய இசை நரம்புகளை நெகிழ்வடையச் செய்து உடலுக்கு உற்சாகம் அளிக்கிறது.
இது மட்டுமல்லாமல் மூளை நரம்புகள் மிகச்சிறப்பாக செயல்படவும் உதவுகிறது. உங்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு இசைப்பயிற்சிக்கு தயார்படுத்துங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். |
|
|
Related Posts : Good to Read,
Health
No comments:
Post a Comment