Search This Blog

Wednesday, April 20, 2011

453 ஆண்டு கால பழமையான கடனட்டை கண்டுபிடிப்பு

453 ஆண்டு கால பழமையான கடனட்டை கண்டுபிடிப்பு

பல்கலைகழக நகரமான விட்டன்பெர்க்கில் 453 ஆண்டு கால பழமை வாய்ந்த கடன் அட்டையை தொல்வியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த கடன் அட்டை ஐரோப்பா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பொக்கிஷமாக உள்ளது என சாக்சோனி அன்ஹால்ட்டின் ஹாலே வரவேற்று அருங்காட்கியக தொல்வியல் நிபுணர் ஆண்ட்ரியாஸ் ஹாலே கூறினார்.
மத்திய கால கட்டத்தில் கடன் அட்டைகள் நீண்ட குச்சி வடிவில் உள்ளன. ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மரகுச்சி 30 செ.மீ நீளத்துடனும், அதன் மேற்பரப்பில் கடன் வாங்கியதற்கான 23 வெட்டு குறியீடுகளும் உள்ளன.
இந்த கடன் அட்டை 1558ம் ஆண்டை சார்ந்ததாக உள்ளது. இந்த விவரம் கடன் அட்டையிலேயே குறிக்கப்பட்டுள்ளது. மத்திய காலத்தில் படிக்கவோ, எழுதவோ தெரியாத மக்கள் கடன் அட்டைகளை மரக்குச்சிகளில் உருவாக்கினர்.
இந்த கடன் அட்டைக் குச்சிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு ஒரு பகுதியை கடன் கொடுத்தவரும், இன்னொருப் பகுதியை கடன் அளித்தவரும் வைத்து இருந்தார்கள். பணம் திரும்ப செலுத்தும் போது உடைக்கப்பட்ட குச்சி ஒன்றாக இணைக்கப்பட்டு கடன் விவரம் சரிபார்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment