ஒரு சில திரைப்படங்களை பார்த்தவுடனே
நம்ம மட்டும் பார்த்தா போதாது...
நமக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரும் பார்க்கனும்...
அதனால எல்லார்கிட்டையும் அந்த படத்தை பற்றி பெருமையாக பேசுவோம்.
அப்படியான திரைப்படம் தான் the great indian kitchen.
எப்படி இந்த மாதிரியான கதைகளை உருவாக்குகிறார்கள், தொடர்ந்து மலையாள சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் புதிது புதிதாக யோசிப்பதும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை திரைப்படமாக எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்...
A slap on patriarchal society...
படம் ஆரம்பிக்கறதே Thanks Scienceனு தான்...thank godங்கற வழமையிலிருந்து விலகி நிற்கிறார் இயக்குனர் Jeo Baby.
*Spoiler alert*
//நிமிஷாவும் சுராஜும் புதுமணத் தம்பதியராய் ஆரம்பிக்கறது கதை. மாமியாரும் மருமகளும் சமைக்க ஆரம்பிக்க வீட்டு ஆண்கள் ரிலாக்ஸ்டாக இருப்பதும், டூத் ப்ரஷ் பேஸ்ட் மாமனாருக்கு மாமியார் கையில் கொண்டு வந்து தருவதுமென அந்த வீட்டின் இயல்பு காட்சிகளில் விரிகிறது.
நிமிஷா சுராஜுடன் அவர்கள் வீட்டு சமையலறையும் ஒரு கதாபாத்திமாக வாழ்ந்திருக்கிறது படத்தில். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை விட, காய் நறுக்குவதும் சமைப்பதும் பாத்திரம் கழுவுவதும் கூட்டுவதும் துடைப்பதும் துவைப்பதும் என அதிகமாய் வளையலிட்ட கைகள் ஆயிரம் கதை பேசுகிறது.
காலை சமையல் முடித்து ஆண்களுக்கு பரிமாறி, பாத்திரம் கழுவி மதியம் சமையலுக்கு காய்கறி வெட்டி சமைத்து பரிமாறி பாத்திரம் கழுவி...என திரும்ப திரும்ப இந்த காட்சிபடுத்தலில் பெண்கள் படும் அயர்ச்சியை அட்டகாசமாய் காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர். எடிட்டிங் அருமை.
இரவானால் உணர்வே இல்லாத புணர்ச்சி...ஃபோர்பிளே என்ற வார்த்தை தெரிந்ததற்கே ஏளனமாய் பேசும் கணவன்...
ஆண்கள் சாப்பிடும் பொழுது வேஸ்ட்லாம் வைக்கும் தட்டில் போடாமல் டேபிள் முழுக்க பரப்பி வைப்பதும், அதே பெண்கள் சாப்பிட்டு முடித்ததும் வேஸ்ட்லாம் அதற்குரிய தட்டில் இருப்பதும் அழகாய் காட்சிகளில் வசனமேயின்றி உணர்த்தப்படுகிறது. இதே ஹோட்டலில் சாப்பிடும்பொழுது கணவன் தனித்தட்டில் வேஸ்ட்லாம் எடுத்து வைப்பதை மனைவி சொல்லும் போது அவர் ஈகோவில் குத்தித் தைப்பதை சுராஜ் அருமையாய் வெளிப்படுத்துகிறார்.
அம்மிக்கல்லில் சட்னி, குக்கரில் வைக்காமல் விறகடுப்பில் வேக வைத்த சாப்பாடு, வாஷிங் மெஷினில் போடாமல் கைகளில் துவைக்கச்சொல்லும் மாமனாரின் தேவைகள்...ஒழுகும் கிச்சன் சின்க் சரி செய்ய கணவன் எந்த முனைப்பும் காட்டாதது...பீரியட்ஸ் வரும் நாளில் எதையும் தொடாமல் தனி ரூமில் பாயில் படுப்பதும்....என இயல்பாய் மருமகளின் தோளில் ஏறும் சுமைகளை திரைக்கதை இயல்பாய் எடுத்துச் செல்கிறது.
அத்தனை அழுத்தங்களும் சேர, சின்க் அடியில் சேர்ந்த அழுக்கு நீரை கணவன் மாமனார் முகத்தில் தூக்கி எறியும் காட்சி மனதிற்கு மிகத் திருப்தியாய் இருந்தது.
கதாபாத்திரங்களுக்கு பெயரே இடப்படவில்லை என்பதே கதைப்போக்கில் தெரியவில்லை என்பது ஆச்சர்யம்.
கடைசிக் காட்சியில் அதகளமான இசையுடன் கூடிய நடனம் துவங்கும் போது உடல் சிலிர்த்துப் போகிறது...//
மனதிற்கு மிக நெருக்கமான கதைக்களம்...பெண்கள் மீதான வன்முறை எந்தவொரு அடிதடி காரசாரமான வார்த்தைகளின்றி, புன்னகையுடன் இயல்பாய் ஆண்கள் சிரித்துகொண்டே வன்முறையை பெண்கள் மேல் ஏற்றுவதை அட்டகாசமாய் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர். அதை நிமிஷா பரிபூரணமாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
Please do watch the movie...
Thanks
Hema Chandrasekar
No comments:
Post a Comment