Search This Blog

Tuesday, January 12, 2021

சந்திரபாபு...

 


தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?
‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்தவர். தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
ஜோசப் பிச்சை” என்னும் இயற்பெயர் கொண்ட சந்திரபாபு, 1927-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி தூத்துக்குடியில் பிறந்தார். பெற்றோர் ஜே.பி.ரோட்டரிக்ஸ் - ரோசரின்.
இவருடைய குடும்பம் சுதந்திரப் போராட்டக் காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்டு, ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் சந்திரபாபுவின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது.
சிறிது காலத்துக்கு பிறகு அவருடைய குடும்பம் மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது
மெட்ராஸ் பாஷையை அவரைப்போல் எவரும் தத்ரூபமாகப் பேசவே முடியாது. சபாஷ் மீனா படத்தில் மெட்ராஸ் பாஷையில் பேசி அசத்துவார்
சந்திரபாபு மேற்கத்திய பாணிப் பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்து விளங்கினார். அவரது பாடல்கள் பலவற்றிற்கு அவரே ஓரளவு இசையமைத்ததாகவும் கூறுவர்.
சுமார் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் இன்றளவும் ஒலிக்கும் அவரது சில பாடல்கள்:
ஜாலி லைப் ( கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
விளையாடு ராஜா ( நான் சொல்லும் ரகசியம் 1959 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
கண்மணிப் பாப்பா ( தட்டுங்கள் திறக்கப்படும் 1966 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தாங்கதம்மா (செந்தாமரை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ஆளு கனம் ( கண்கள் 1953 கம்பதாசன் இயற்றிய பாடல் )
கோவா மாம்பழமே ( மாமன் மகள் 1955 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
புத்தியுள்ள மனிதன் ( அன்னை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ராக் ராக் அண்ட் ரோல் ( பதிபக்தி 1958 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
பம்பரக் கண்ணாலே ( மணமகள் தேவை 1957 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
ஐயோ மச்சான் மன்னா ( ஸ்ரீ வள்ளி 1961 ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
ஒற்றைக் கண்ணு ( வாலிப விருந்து 1967 சீத்தாராமன் இயற்றிய பாடல் )
எப்போ வச்சிக்கலாம் ( பந்தபாசம் 1962 மாயவநாதன் இயற்றிய பாடல் )
என்னைத் தெரியலையா ( யாருக்கு சொந்தம் 1963 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
சிரிப்பு வருது ( ஆண்டவன் கட்டளை 1964 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தனியா தவிக்கிற வயசு ( பாதகாணிக்கை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
கவலையில்லாத மனிதன் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
பிறக்கும் போதும் அழுகின்றாய் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஒன்னுமே புரியல ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஹலோ மை டியர் ( புதையல் 1957 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
குங்குமப்பூவே ( மரகதம் 1959 கு.மா.பாலசுப்ரமணியன் இயற்றிய பாடல் )
தடுக்காதே என்னை ( நாடோடி மன்னன் 1958 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
தில்லானா பாட்டு ( புதுமைப்பித்தன் 1957 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
சரியான ஜோடி தந்தானே ( காத்தவராயன் 1958 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
நான் ஒரு முட்டாளுங்க ( சகோதரி 1959 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
சந்தோஷம் வேணுமென்றால் ( சுகம் எங்கே 1954 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
அச்சு நிமிர்ந்த வண்டி ( குலேபகாவலி 1955 )
சொல்லுறதை சொல்லிப்புட்டேன் ( பாண்டித்தேவன் 1959 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
நீ ஆடினால் ( பாண்டித்தேவன் 1959 )
மனதிற்குகந்த மயிலே ( பெற்றமனம் 1960 )
பாடிப் பாடிப் ( பெற்றமனம் 1960 பாரதிதாசன்

சொந்த வாழ்க்கை

நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர். அவருக்குப் பொதுவாகவே தன் நடிப்பின் மீது எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு, ஆகையால் ‘நினைத்ததை செயல்படுத்தியே தீருவேன்’ என்ற பிடிவாத குணம் என்பதால் பலரால் திமிர் பிடித்தவன் என்று புரிந்துகொள்ளப்பட்டார். இதனால், சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் அவரைச் சூழ்ந்தே இருந்தன. மேலும் குடிபழக்கம் அதிகம் உள்ளவராகவும், பெத்தடின் என்னும் போதைப்பொருளுக்கு அடிமையானவராகவும் இருந்தார்.

இறப்பு

சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.

உண்மையை சொல்லப்போனால், சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

No comments:

Post a Comment