Nüshu is considered to be the world’s only writing system that is created and used exclusively by women. Originating in China’s Jiangyong county in the nineteenth century, it gave rise, over time, to a traditional female culture, which is endangered today. The country’s local and national authorities are working to revive it.
By Chen Xiaorong
Indran Rajendran
சீனாவில் பெண்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பதை ஆண்கள் மறுத்தார்கள். இந்த இழிநிலையை சீனத்துப் பெண்கள் புதுவழியில் மீறினார்கள்.ஆண்களுக்குத் தெரியாத ரகசிய எழுத்து வரிவடிவம் ஒன்றைக் கண்டு பிடித்தார்கள். பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு எழுத்தை உருவாக்கினார்கள்.அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள்.
நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.
இதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.. 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடும் கிறுக்கியது போல் இருக்கும். விசிறிகளிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள். பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள். ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.
தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று. யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண். பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
No comments:
Post a Comment