"என்னுடைய வளர்ச்சியையும், மாற்றத்தையும் என் படங்களின் மூலமாகவே தெரிந்துக்கொள்கிறேன்.
கஷ்டமான சிக்கல்கள் ஒருவர் வாழ்வில் தொடர்ந்தபடி இருந்தால், மாய கற்பனைகளால் ஆன உலகில் வாழ்வது என்பது சிறிதளவாவது ஆறுதல் தரும்."
- Kim Ki Duk
கிம் கி-டக் தென் கொரியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவார். இவருடைய திரைப்பட பாணி வித்தியாசமானதாகவும், கலைநுட்பமானதாகவும் இருப்பதால், ஆசியா அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். திரைப்பட இயக்குநர் கிம் கி டக். 1960-ம் ஆண்டு பிறந்த அவர், 1996-ம் ஆண்டு க்ரோகடைல் என்ற படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார்.
இவரது பல திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளன.
அவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் நாடு எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் சென்றடைந்தது. அவருடைய படங்களில் சமாரிட்டம் கேர்ள், 3 அயர்ன், அரிரேங், பியிடா, ஒன் ஆன் ஒன் ஆகிய படங்கள் சினிமா ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் படமாக இருந்துவருகிறது. தென் கொரிய இயக்குநர்களிலேயே கிம் கி டக் மட்டும்தான், உலகின் மிகப் பெரிய விருதுகளான கேன்ஸ், வெனிஸ், பெர்லின் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
உலகமே கடவுளைத் திறந்து காட்டிக் கொண்டிருந்த போது கடவுளுள் இருக்கும் சாத்தானை திறந்து காட்டி இதுவும் நிஜம் தான் என்று பொதுவெளியில்... எல்லாம் வல்ல மானுட மனத்தின் இருட்காலத்தை வெளிச்சமேற்றிய கலைஞன்.
"கிம் கி டுக்"ன் படங்களைக் காண்பது என்பது... தனித்து மலையேறுவது......அல்லது தனித்து மலை இறங்குவது......அல்லது தனித்த மலையாவது.
"கிம் கி டுக்"கின் கதை மாந்தர்கள்......அதிகமாய் பேசுவதில்லை. அவர்கள் எப்போதும் தனித்தே இருக்கிறார்கள்......அல்லது தவித்தே இருக்கிறார்கள்.....அல்லது தவிர்த்தே இருக்கிறார்கள். பெரும்பாலான படங்களில் பேச ஒன்றும் இருப்பதில்லை. இரண்டு பக்கம் வசனம் பேச வேண்டிய காட்சியை ஒரே ஒரு பிரேமில் காட்டி விடுகிறார். கரை கண்ட திரை சதுரம் வால் ஆட்டாத நாய்க்குட்டி தான் அவருக்கு. காட்சி மொழியில் அவர் திரை கனக்கச்சிதமாக கதை சொல்கிறது. அருகிலும் தூரத்திலும்.... ஒற்றை இறகை பறக்க விட்டு..... பார்த்துக் கொண்டே இருக்கும்... தூரத்து கடல் அலையின் ஆர்ப்பரிப்பு நம்மை சுற்றிலும் இயங்கிக் கொண்டே இருக்க செய்வது.... சித்து வேலை அல்ல. சித்தன் வேலை.
இருக்கும் என்பது இல்லாமலும் தான்....என்பதாகட்டும்...(3 iron) முகம் மாற்றித் திரியும்....அன்பின் புறக்கணிப்பாகட்டும்......(Time). அறுக்கப்பட்ட மகனின் உறுப்புக்காக பரிதவிக்கும்....தந்தையாகட்டும்........(Mobeus) சிறையில் இருக்கும் காதலனை காண சென்று ஒரு சிறுமியாக ஆடி களிப்பூட்டும் காதலாகட்டும்.....(breath) அசைந்தாடும் பிரிவும் அகம் தீண்டும் சோகமும் நேர்த்தியோடு மிக மெல்லிய இசையாகி விடுகிறது...அவர் சினிமாக்களில்.
"இந்த உலகத்தில் நாம் வாழ்வது என்பது நிஜமா கற்பனையா என்பதை அத்தனை எளிதில் சொல்லி விட முடியாது...." எனும் தத்துவார்த்த ஊடறுப்பு சதா நிகழ்ந்து கொண்டே இருக்கும்.. கதைக்களங்கள் இவருடையன. காட்சிக்கு காட்சி 'ரா'வான ரத்தின சுருக்கம்... திரைக்கதையாகி இருப்பது... தனி வடிவம். படத்தில்... படகில் தனக்கு தானே தண்டனை கொடுக்கும் பெண்ணின் தூண்டிலில்.... உலகமே கதறும் ஒரு காட்சி.... நிஜத்தை நேருக்கு நேர் காணுகையில்... நெஞ்சத்தில் நெருப்பூரும் என்பது.(the isle) எடுத்த இடத்தில் கிடைக்கும் தொலைத்தல்... தொலைந்த பிறகும் எடுக்கும் காலத்தின் ஜோடித் தத்துவம்.. நட்பெனவும் கொள்க. (samirtan girl) நினைத்த நாட்டுக்கு செல்ல கிடைத்த வழி... உடல் விற்பனை. உடலும் உடலும் சொல்லும் தத்துவத்தில்... என்னானது....பயணம். அலற வைக்கும்.... அரூப நடை அவருடையது.
(bow) ம் (bad guy) ம் நெருங்க முடியாத நிர்பந்தம். நெற்றியில் விலகும் நேர் கோட்டு சித்திரம். நீருக்குள் நிகழும் நின் கடன் மானுடம் சேர்ப்பது (crocodile). வன்முறையே நம்மை வழி நடத்துகிறது. அதற்கு தான் மாற்று பெயர்களை சுமந்து கொண்டு அலைகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த புரிதலில் அளவு வேண்டுமானால் மாறலாம். ஆனால் ஆழம் மாறாது. கொரியாக்களின் சண்டையை (the Net) தன் வலையை நகர்த்திக் கொண்டு காட்டியது. மானுட குயுக்தி வெளி வந்தது (human space time & Human) தினம் ஓர் உடல்... தினம்... தான் ஒரு கடல். என மறுபக்கத்தை போட்டுடைக்கும் கிம் கி டுக்.... அதிரூபன் இல்லை.... ஆனால்.... அந்நியனும் இல்லை.
இந்த மானுடத்தின் சாபமும்.. வரமும்.. அன்பு மட்டுமே. (pieta) அது இருக்கும் ஆயுதத்துக்கெல்லாம் உயர்ந்த ஆயுதம். அதைக் கொண்டு... எதிராளியின் மனதுக்குள் கூர் கத்தி ஒன்றை செய்து உள் நோக்கி மரணத்தை திருப்பி விட்டு விட முடியும். அடித்துக் கொண்டேயிருப்பது வன்முறை என்றால்.. அடி வாங்கிக் கொண்டே மீண்டும் மீண்டும் அடி என்று கூறுவது வன்முறையின் உச்சம். உச்சத்தின் முனையில் நின்று உலகுக்கு மௌனமாய் எடுத்து சொல்வது... அத்தனையும் இந்த மானுட வாழ்வின் ஆதி பரியந்தம் தான். வேதாளம் இடம் மாறும் நுட்பத்தைத் தான் மனிதன் கடவுளுக்கு பிரார்த்திக்கிறான்.
எதிர் வினையில் நின்ற வினைக்குள் எட்டிப் பார்க்கும் பொருளுக்கு பொருளற்று சேர்ந்து கொள்ளும்.... பொருள் ஒன்றில்...சொல்லப் படும் நிர்பந்தங்களைத்தான் இந்த மனித மனம் விரும்புகிறது. அந்த மனம் முழுக்க... அவனின் துயரத்தின் சுவடுகள்... மீள் பயத்தின் மிச்சமென...அவனால் விரும்பப் படுவது தனிமையின் இருள் சேர்ந்த சில காலங்களின் சாபங்கள் தான். வினோதம் மூச்சடைத்து சாவும் மணித்துளிகளை மனம் மீன் தொட்டியில் ரசித்துக் கொண்டிருக்கும். ஒழுக்கம் என்பது ஊர்களை பொருத்தது என்று ஒரு பாடல் வரி உண்டு. அதையும் தாண்டி... ஒழுக்கம் என்பது உள்ளத்தை பொறுத்தது என்று கூட யோசிக்க வைக்கும்.
உள்ளார்ந்த கசடு நிறைந்த மனித மிருகத்தின் மிச்சத்தை எடுத்துக் காட்டிய கலைஞன். அவர் ஊரில் பெரிதாக வெறுக்கப்பட்ட அதே நேரம் உலகலாவில் பெரிதாக விரும்பப்பட்ட... கதைக்க சொல்லி கிம் கி டுக் ஓர் உக்கிர தூதுவன்.
வலிமைக்கு வலிமை எளியவையும் ஆகும். அது மிகச் சாதாரணமாக கதவைத் தட்டி விட்டு கடந்து விடும். திறக்கையில் அன்போடு சிறகு முளைத்த தேவதை ஒருத்தி எந்த வயதிலும் நிற்கலாம்....ஒரு கூடை அன்பை சுமந்தோ...அல்லது ஒரே ஒரு காரணம் சுமந்தோ. அன்பை விட கொடிய ஆயுதம் ஒன்று உண்டோ....! என்று ஒவ்வொரு கதையிலும்... ஒவ்வொரு வடிவம் கொண்டு இருத்தல்......அழிக்கும் ஆக்கம்....திகைக்கும் பிரமிப்பு என்பதைத் தாண்டி தனி மனித சுத்திகரிப்பு... எனலாம்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவரும் அவரவருக்கான செய்தியை சுமந்தலைவது விதி. இந்த தேகத்தின் வரம்பறியா நிலையில்.. மலைமீது புத்தனை சுமந்து செல்லும் சுய திருப்தி...(spring summer fall winter & spring) சுயம் அழித்தல்... அல்லது சுயம் மீட்டல்....என்று ஆன்மீக துவாரம் அதே அளவில் நீண்டு கொண்டு போவதை பேரன்பின் மௌனத்தோடு உணர்ந்திருக்கிறேன். "கிம் கி டுக்"கின் சினிமா எல்லாருக்கும் நெருக்கமான வாழ்வின் ஜன்னலை திறந்தே வைத்திருக்கிறது. அதன் வழியே ஒரு பெரும் வாழ்வின் திரை பதட்டத்தோடே விலகுகிறது.
தன்னை திறந்து திறந்து திறந்து கொண்டே சென்ற கலைஞன் சட்டென கண் மூடிக் கொண்டதை திரை தாண்டியும் வருத்தத்தோடு உணர்கிறேன். இசைக்க தெரியாத போது சத்தமிட்டு அழுது விட தோன்றும் சில நொடி பிதற்றல்களை "கிம் கி டுக்" என்ற மகா கலைஞனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மனிதன் தான் சாவான். கலைஞன் இல்லை.
கவிஜி
Kim Ki Duk க்கிட்ட வியந்த விஷயங்கள்.
Cinema is Visual Medium னு ஆழமா நம்புன ஒரு ஆள். பார்க்குற ஒவ்வொரு காட்சியும், கவிதையும், ஓவியமுமா இருந்துச்சு.
Sounding.
ஒரு படத்துல Sounding எப்படி Use பண்ணப்பட்டுருக்கு என்பதை பொருத்து தான், அவர் எப்பேர்ப்பட்ட Director னு நிர்ணயிப்பாங்கனு சொல்வாங்க.
Kim Ki Duk அதுல கில்லாடி.
வன்முறை, காமம், குரோதம்னு எல்லாத்தையும் படம்பிடிச்சிட்டு, அதோட உச்சபட்சத்தை Sounding ல சொல்லி இருப்பாரு.
சொல்லப்போன உட்சபட்ச எல்லா Emotions அயும், அவரு Sounding ல படம் பிடிச்சார்னு தான் சொல்லணும்.
அடுத்து Writing.
அவரோட எழுத்துக்கள் யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும், உணர்ச்சிகளோட உச்சமாகவும், இயல்பாகவும் இருக்கும்.
நிச்சயம் நம்ம நினைச்சுக் கூட பார்க்காத Emotions அ எழுத்துக்கள்ல கொண்டு வந்துருப்பாரு.
வாழ்க்கையைப் பற்றிய புரிதல்.
காலநிலைகள் தொடர்ந்து மாறிக்கிட்டே இருந்தாலும், அது இயல்பாகவே நடக்கக்கூடிய, மாற்ற முடியாத இயற்கைக்கொத்த விஷயங்கள் தான்னு சொல்லி இருப்பாரு. (Spring, Summer, Fall, Winter and Spring).
நடைமுறைல இருக்குற எல்லா மனுஷங்களோட Rules அ Use பண்ணி, அதை Fail பண்ணி, Break பண்ணி, கற்பனைக்கெட்டாத மாய தோற்றங்களையும், உலகத்தையும் உருவாக்கி இருப்பாரு.
பலதரப்பட்ட, பல்வேறு உணர்ச்சிகளுடைய மனுஷங்களால நிறைஞ்சது தான் உலகம். அப்படிப்பட்ட உலகம், அவங்களாலயே அழிஞ்சு, புது உலகம் உருவானாலும், அதே வகைப்பட்ட வெவ்வேறு உணர்ச்சிகளுடைய மனுஷன் தான் உருவாகுவான் என்பதைக் காட்சிப்படுத்தி இருப்பாரு.
ஒரு தாய் மக்கள் நாம் என்பதை அவருக்கே உரிய Style ல வண்முறையோடயும், காமத்தோடயும், அழகியலோடயும் காட்சிப்படுத்தி இருப்பாரு.
இது எல்லாத்தையும் தாண்டி, வாழ்க்கை ஒரு மலையைப் போன்றது. Ups and Downs இருந்துகிட்டே தான் இருக்கும். அது தான், Life அ Balance ஆ வைக்கும்னு நம்புற ஒரு ஆள்.
Arirang (2011).
இது Kim Ki Duk உடைய Self Documentary. படத்தளத்துல (Dreams) ஏற்பட்ட விபத்துக் காரணமா 2008 - 2011 ல எதுவுமே செய்யாம வெறும் குடி, வாழ்க்கைனு ஓட்டிக்கிட்டு இருந்த Kim Ki Duk தன்னைத் தானே, Interview பண்ணி, Roast பண்ணி, மீளுருவாக்கம் பண்ணின Video.
என்னால படம் எடுக்க முடியாது. ஆனா, படம் இயக்கியே தீருவேன்னு தன்னை தானே Shoot பண்ண Video.
Filmmaking அ Passion ஆ வச்சுருக்குற அனைவரும் பார்க்க வேண்டிய Documentary.
2000-ம் ஆண்டு கிம் இயக்கிய த இஸ்லே படம் 2001-ம் ஆண்டு டோரென்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது, கிம் படங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. 2017-ம் ஆண்டு கிம் மீது அவருடைய படத்தில் நடித்த நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அது மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லட்வியாவுக்குச் சென்றார். அங்கே சென்ற அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
No comments:
Post a Comment