Search This Blog

Thursday, December 10, 2020

Children of Heaven Movie Review

Synopsis

  • Ali takes his little sister Zahra's shoes to the shoemaker to be repaired, but loses them on the way home. The siblings decide to keep the predicament a secret from their parents, knowing that there is no money to buy a replacement pair and fearing that they will be punished. They devise a scheme to share Ali's sneakers: Zahra will wear them to school in the morning and hand them off to Ali at midday so he can attend afternoon classes. This uncomfortable arrangement leads to one adventure after another as they attempt to hide the plan from their parents and teachers, attend to their schoolwork and errands, and acquire a new pair of shoes for Zahra. Zahra sees the shoes on a schoolmate's feet, and follows her home, but the two soon become friends.

    Ali enters a high-profile children's footrace in the hope of receiving the third prize of a new pair of sneakers. He accidentally places first and wins another prize instead. The film ends with Zahra finding out that she will not get a new pair of shoes, but there is a quick shot of their father's bicycle at the end of the movie that shows what appears to be the red shoes Zahra had been focusing on earlier and another pair of white sneakers, presumably for Ali, whose old sneakers were torn from so much use. The film ends with the final shot showing blisters on Ali's feet. Some versions include an epilogue revealing that Ali eventually achieves the larger-scale success of having a racing career.


"Children of Heaven'' is very nearly a perfect movie for children, and of course that means adults will like it, too. It lacks the cynicism and smart-mouth attitudes of so much American entertainment for kids and glows with a kind of good-hearted purity. To see this movie is to be reminded of a time when the children in movies were children and not miniature stand-up comics.

The movie is from Iran. Immediately you think kids would not be interested in such a movie. It has subtitles. Good lord! Kids will have to read them! But its subtitles are easy for 8- or 9-year-olds, who can whisper them to their siblings, and maybe this is their perfect introduction to subtitles. As for Iran: The theme of this movie is so universal there is not a child who will not be wide-eyed with interest and suspense.

The film is about a boy who loses his sister's shoes. He takes them to the cobbler for repairs, and on the way home, when he stops to pick up vegetables for his mother, a blind trash collector accidentally carries them away. Of course, the boy, named Ali, is afraid to tell his parents. Of course, his sister, named Zahra, wants to know how she is supposed to go to school without shoes. The children feverishly write notes to each other, right under their parent's noses.

The answer is simple: Zahra will wear Ali's sneakers to school every morning, and then run home so that Ali can put them on for his school in the afternoon. But Zahra cannot always run fast enough, and Ali, who is a good student, gets in trouble for being late to class. And there is a heartbreaking scene where Zahra solemnly regards her own precious lost shoes, now on the feet of the ragpicker's daughter.

I submit that this situation is scarier and more absorbing for children than a movie about Godzilla or other manufactured entertainments. Even when you're a kid, you know you're not likely to be squished by a giant lizard, but losing something that has been entrusted to you? And getting in trouble at school? That's big time.

Majid Majidi's film has a wonderful scene where Ali and his father bicycle from the almost medieval streets and alleys of the old town to the high-rises and luxury homes where the rich people live. The father hopes for work as a gardener, but he is intimidated by the challenge of speaking into the intercoms on the gates of the wealthy. His son jumps in, with offers of pruning, weeding, spraying and trimming. It is a great triumph.

And then there is a footrace for the poor children of the quarter. The winner gets two weeks in a summer camp and other prizes. Ali doesn't care. He wants to place third, because the prize is a new pair of sneakers, which he can give to his sister. My guess is that the race and its outcome will be as exciting for many kids as anything they've seen at the movies.

"Children of Heaven'' is about a home without unhappiness. About a brother and sister who love one another, instead of fighting. About situations any child can identify with. In this film from Iran, I found a sweetness and innocence that shames the land of Mutant Turtles, Power Rangers and violent video games. Why do we teach our kids to see through things, before they even learn to see them?

Roger Ebert

Roger Ebert was the film critic of the Chicago Sun-Times from 1967 until his death in 2013. In 1975, he won the Pulitzer Prize for distinguished criticism.



Children of Heaven -சினிமா ஒரு பார்வை - கவிஜி
*******************************************************************
ஈரான் சினிமாக்கள் உலக சினிமாக்களில் தனி இடம் பிடித்திருப்பவை. ஈரான் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு....... இருக்கும் வரையறைக்குள்....... கதை சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதுவே பிறகு நேர்த்தியாகி விட்டிருக்கிறது. இப்படியும் படம் எடுக்க முடியுமா என்று நம் போன்ற நாடுகள் கற்றுக் கொள்ளும் உதாரணம் இந்த படம். ஈரானில் உள்ள குறிப்பிட்ட சில இயக்குனர்களில் 'மஜீத் மஜிதி' மிக முக்கியமானவர். வறுமையின் கோரப் பிடியில் பூத்திருக்கும் பூக்களை உதிர விடாமல் கூட்டிச் செல்லும் வாழ்க்கையைக் கொண்டு இந்தப் படத்தை செதுக்கியிருக்கிறார்.
"சில்ரன் ஆப் ஹெவன்" செருப்பைக் கொண்டும் இலக்கியம் படைக்க முடியும் என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டிய சினிமா.
றோஸ் நிற செருப்பை தைப்பதில்தான் படம் ஆரம்பிக்கிறது.
பின்னால் தூரத்தில் கடவுளின் கீதம் ஓதப்பட்டுக் கொண்டிருக்கிறது. தைத்த செருப்பை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கொஞ்சம் ரொட்டியும் வாங்கி செல்லும் நம் கதை நாயகன் அலிக்கு வயது எட்டிலிருந்து பத்து இருக்கலாம். உருளைக் கிழங்கு வாங்குவதற்காக சற்று முன் தைத்த செருப்பையும் வாங்கிய ரொட்டியையும் வெளியே இருக்கும் பழக்கூடை சந்தில் வைத்து விட்டு உள்ளே செல்கிறான். அந்த சமயத்தில் குப்பை எடுப்பவர் அவ்வழியே வந்து........எடுக்கும் குப்பையோடு குப்பையாக....... அந்த செருப்பையும் எடுத்து போய் விடுகிறார். உருளைக்கிழங்கு வாங்கி விட்டு வெளியே வரும் அலிக்கு செருப்பு காணாமல் போனது அதிர்ச்சியாகிறது.
"தங்கச்சியோடு செருப்பு......இங்கதான் வெச்சேன்...... காணோம்......" - எவ்ளோ சொல்லியும் கடைக்காரர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விரட்டி விடுகிறார்.
வீட்டில் இந்த விஷயம் தங்கைக்கு தெரிய வருகிறது. வார்த்தைகளற்ற மவுனத்தில் 'நான் எப்படி பள்ளிக்கு செல்வது...!' என்று அப்பா அம்மாவுக்கு தெரியக் கூடாது என்பதற்காக நோட்டில் எழுதிக் காட்டி கேட்கிறாள். சக்கரைத் துண்டு உடைக்கும் அப்பாவும்.... உடல் நோயாளியான அம்மாவும் வறுமையின் வரைபடத்துக்குள் பேசிக் கொண்டிருக்கும் பின்னணியில் இவர்கள் செருப்பு தொலைந்ததற்கும் அதற்கு மாற்று என்ன செய்ய வேண்டும் என்றும் எழுதி எழுதி பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே வீட்டில் இருக்கும் கஷ்டத்துக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தது அப்பாவுக்கு தெரிந்தால்... கதை முடிந்தது.
அடுத்த காட்சியில் தங்கை சாரா பள்ளி விட்டு வருவதற்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கிறான் அலி. அவள் வந்தால் தான் அவள் அணிந்திருக்கும் தன் ஷூவை வாங்கி தான் அணிந்து கொண்டு இரண்டாவது ஷிஃப்ட் அதாவது மதியத்துக்கு மேல் நடக்கும் தன் வகுப்புக்கு செல்ல முடியும். ஷூ இல்லாமல் போனால் பள்ளிக்குள் விட மாட்டார்கள்.
வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரையும் 'ஷூ போட்ருக்காங்களா' என்று டீச்சர் சோதனை செய்து கொண்டிருக்கையில்.....அண்ணனின் பழைய நைந்து போன ஷூவைப் போட்டுக் கொண்டு தயங்கி தயங்கி பம்மி நிற்கும் அந்த சிறுமியின் கால்களில் சிறுகுகள் முடங்கிக் கிடப்பதைக் காண்கிறோம். குடும்ப வறுமையின் தீவிரம் பிள்ளைகளின் மேல் விழுவதை உணர்த்தும் காட்சி இது.
'இந்த ஷூ ரெம்ப அழுக்கா இருக்கு... போட்டுட்டு போறதுக்கே கஷ்டமாருக்கு' என்று சொல்கிறாள் தங்கை சாரா. அலி ஷூவை சோப்பு போட்டு கழுவி துவைக்கிறான். பார்த்த மாத்திரத்தில் பொசுக்கென்று நீர் பூக்கும் புன்னகை அவளிடம் அப்போது பிறக்கிறது. துவைக்கையில்..... சோப்பு நுரையில் முட்டைகள் செய்து காற்றில் விட்டு.... ஒருவரோடு ஒருவர் விளையாடியபடி அவர்களின் காலம் புன்னகை சிந்துகிறது. அப்போதைக்கான ஆசுவாசத்தை பளிச்சென்று காயும் அந்த ஜோடி ஷூ தருவதாக இருக்க.....அடுத்த நாளிலிருந்து அவர்களின் உலகம் இரட்டைக் கால்களால் சுழல ஆரம்பிக்கிறது.
ஒரே ஜோடி ஷூவை வைத்துக் கொண்டு அண்ணனும் தங்கையும் காலையில் அவளும் மதியம் அவனுமாக மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு பள்ளி போகும் போது பார்த்த விழிகளில் பரிதவிக்கும் கண்ணீர் பொருள் சூழ்ந்து கொட்டும். ஒவ்வொரு நாளும் தாமதமாக பள்ளி நுழைந்து ஹெட்மாஸ்டர்க்கு பயந்து பயந்து வகுப்புக்குள் செல்லும் அவனை பின் தொடருதல் மிக மிக துயரமானது. அவன் கண்களில் எப்போதும் தயாராக இருக்கும் கண்ணீரின் சூடு தாங்கவே முடியாதது.
ஒரு நாள் ஹெட் மாஸ்டரிடம் மாட்டிக் கொள்கிறான்.
"போ..... போய் உங்க அப்பாவை கூட்டிட்டு வா" என்று ஹெட்மாஸ்டர் திட்டும் போது.....கண்களில் நீர் திரள "அவர் வேலைக்கு போய்ட்டார்..... " என்று சொல்வான். "நாளைக்கு கூட்டிட்டு வா" என்று மீண்டும் அவர் சொல்ல... "நாளைக்கும் அவர் வேலைக்கு போவார்" என்று சொல்வான். " சரி அம்மாவையாவது அழைத்து வா" என்கையில்..."அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை" என சொல்லி கண்ணீர் விடும் அவன் பாதங்களில் யாரிடமும் பகிர முடியாத சுமை ஒன்று எப்போதும் இருப்பதை அப்போதும் நாம் உணர்கிறோம்.
நாட்கள் நகர... ஒரு நாள்.... பள்ளி முடிந்ததும்...வேகமாக ஓடி வருகையில் தொள தொளவென இருப்பதால்...சாராவின் காலில் இருந்து ஒரு ஷூ படக்கென்று கழன்று ஓடும் சாக்கடையில் விழுந்து விடுகிறது. சாக்கடை நீர் ஓட..... அதில் ஷூ மிதந்து போய்க் கொண்டிருக்க.....அதை விரட்டிக் கொண்டே சாக்கடையின் இருபக்கமும் மாறி மாறி ஓடும் ஒற்றை ஷூ அணிந்த அந்த பிஞ்சுக் கால்கள் படும் பாடு... ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு அடி தரும் உலகத்தின் கோர பக்கங்களை பறை சாட்டுபவை. உலக பொருளாதாரம் ....... உலகமயமாக்கல்........ தாராளமயக்கொள்கை.....என்று ஒரு வெங்காயமும் வேலைக்காகாது. ஒரு செருப்பின் விலை தான் அந்த ஊரில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது......என்று உலக கதவுகளை எட்டி உதைத்து சொல்கிறது காட்சி. ஓடி ஓடி குனிந்து குனிந்து செருப்பை எப்படியாவது பிடித்து விட முயற்சிக்கும் சிறுமியின் முகத்தில் ஏறி இறங்கி தவிக்கும் பரிதவிப்பில் நிரம்பும் பெருமூச்சு.... சொல்லொணாத் துயரம். சொன்னாலும் துயரம்.
ஒரு வழியாக சாக்கடையில் கிடக்கும் குப்பைகளுக்குள் சிக்கி ஷூ ஓரிடத்தில் தேங்கி விட.......வழிப்போக்கர் ஒருவர் உதவியோடு.... சாக்கடை அள்ளுபவர் அலாக்காக தூக்கி கொடுப்பார். கடவுள் போல. ஆனால் உள்ளே பதபதைக்கும் அண்ணனின் காத்திருப்பு இன்னும் மூச்சு வாங்க ஓட வைக்கும். நம்மையும் கூட மூச்சு வாங்க பின் தொடர வைக்கும்.
இதற்கிடையில் சாரா பள்ளியில் யாராவது தன் செருப்பை திருடி விட்டார்களா என அவ்வப்போது ஒவ்வொரு காலாக பார்த்துக் கொண்டே இருக்கிறாள். மாய சுமையை மனதில் இருந்து இறக்கி வைக்க தேடும் பார்வையைக் கொண்டிருக்கும் அந்த தேடலின் நுட்பம். அதே போல அவர்களின் பள்ளியில் அவளையொத்த ஒரு ஜோடி கால்களில் அவளின் றோஸ் செருப்பு... ஒளிந்திருக்கிறது. அந்த சிறுமி இலந்தைப்பழம் மாதிரி ஒன்றை தின்றபடி நின்றிருப்பாள். அருகில் நின்று அவளையே அவளின் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கும் சாராவின் கண்களில் வழி தெரியாத துக்கத்தின் பாதை மறந்த பாதங்களை நாம் உணர்வோம். கோபம்... தடுமாற்றம்.. தவிப்பு... இயலாமை எல்லாம் கலந்து அவளைப் பின் தொடர்ந்து வீட்டையும் கண்டு பிடித்து விட்டு அடுத்த காட்சியில் தன் அண்ணனோடு வீ ட்டு வாசலில் நிற்பாள்.
ஓடி ஓடி விளையாடியபடியே நடக்கும் அவளை பரிதவிப்போடு ஓடி பின் தொடரும் சாரா - இந்த காட்சி தரும் தாக்கம் சினிமாக்களில் எப்போதேனும் நிகழும் அபூர்வம்.
வார்த்தைகளற்ற பாவனையில் இருவரும் மிக நெருக்கமான......தேவையான ஒரு உண்மையை விவரிக்கும் இடத்தில் ஒளிந்து நிற்கிறார்கள்.
சரி போய் கேக்கலாம் என்பது போல...வீட்டை நோக்கி இரண்டடி எடுத்து வைக்க.... அதே நேரம் வீட்டின் கதவு திறக்கப்பட.... வேகமாய் பின்னால் ஓடி வந்து மறுபடியும் ஒளிந்து கொண்டு பார்க்கிறார்கள். அந்த சிறுமி விளையாடியபடியே வெளியே வர அவளைத் தொடர்ந்து கண்ணில்லாத அவளின் அப்பா வெளியே வந்து அவளைத் தூக்கி கொஞ்சுகிறார். கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இப்போது வீட்டுக்குள் இருந்து அந்த சிறுமியின் அம்மா வருகிறாள். விற்பனைக்கான தொங்கும் பெட்டியை கண்ணில்லாத கணவன் கழுத்தில் மாட்டி விட்டு வழி அனுப்பிகிறாள். சிறுமி கண்ணில்லாத தன் அப்பாவை கை பிடித்து கூட்டிக்கொண்டு செல்கிறாள். கண்கள் நடுங்க பார்த்துக் கொண்டிருக்கும் இவர்கள்...அவர்கள் நம்மை விட ஏழைகள் என்று புரிந்து கொள்கிறார்கள். அர்த்தத்தோடு அவர்களைப் பார்த்துக் கொண்டே பேசமுடியாத ஈரான் வீதி வளைவுகளில்.....அண்ணனும் தங்கையும் உயர்ந்த மனிதர்களாக வீடு திரும்புகிறார்கள். அதே கடவுள் கீதம் பின்னால் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும். மானுட நேயத்தின் மிகப்பெரிய காட்சியை மிக எளிமையாக நகர விட்டிருப்பார் இயக்குனர். அங்கே நிலவும் மௌனங்களில் உலகில் உள்ள அத்தனை அணுகுண்டுகளும் செயல் இழந்த மாதிரி இருந்தது.
அதன் பிறகு அண்ணனும் தங்கையும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். காலையில் அவளும்... மதியத்தில் அவனும்.... நீண்டு கொண்டே செல்லும் அவர்களின் முடிவுறாத பாதையில் ஓடி ஓடியே நாட்களை கடத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும்....ஓட்டங்களின் உவமை தான் அவர்களுக்கு.
இந்த சமயத்தில்...சிறுவர்களுக்கான ஓட்ட பந்தய போட்டி ஒன்று நடக்க இருப்பது தெரிந்து அதில் கலந்து கொள்ள போவதைப் பற்றி தங்கையிடம் கால்கள் மலர சொல்கிறான். காரணம் இரண்டாவது பரிசு ஒரு ஜோடி ஷூ.
"ஒரு வேளை முதலாவதாக வந்து விட்டால் என்ன செய்வது...?" என்று கேட்கிறாள் தங்கை.
"அவர்களிடம் முதல் பரிசை கொடுத்து இரண்டாம் பரிசை வாங்கி கொள்ளலாம்... " என்று சொல்லும் களங்கமற்ற முகத்தில்... கண்களின் ஒட்டத்தைக் காண முடியும். அங்கிருந்தே அவன் பாதங்கள் ஓட ஆரம்பித்து விட்டதை உணர முடியும். அதன் பிறகு போட்டியில் கலந்து கொண்டு ஓட ஆரம்பிக்கிறான். அவன் ஓடிக் கொண்டிருக்கும் அந்த பத்து நிமிடங்கள்....... அவன் காலடி சத்தங்களின் செய்வதறியாத ஒலி....... நம் இதயத்துக்குள்....... மிக மிக வலிமை வாய்ந்த சத்தமாக பிரபஞ்சத்தின் மீது பட்டு பட்டு எதிரொலிக்கும். கால்களே செருப்பாக இருக்கும் எத்தனையோ பாத சுவடுகளின் துயர தூரங்களை அவன் மூச்சிரைக்க கடந்து கொண்டிருப்பான்.
"தினமும் லேட்.....பழைய பிஞ்சு போன ஷூ....... அழுக்கான ஷூ...... இனி இதை நான் போட மாட்டேன்...." என்று தங்கை சொல்வது காதில் கேட்கிறது. வியர்த்து ஒழுகும் அண்ணன்..... உடல் இரைக்க.......தப் தப்.......தப் தப்...... தப் தப் என்று ஓடிக் கொண்டே இருக்கிறான். ஓடுகிறான். தனக்கு முன்னால் ஒருவனைத்தான் விட வேண்டும். இரண்டாம் இடத்தை தக்க வைத்தபடியே ஓட வேண்டும். அந்த கணக்கில் அவன் முன்னும் பின்னும் பார்த்து பார்த்து ஓடுவது நம்மை ஓடாமலும்
மூச்சிரைக்க செய்யும். எல்லாரும் முதல் இடத்துக்கு ஓடிக் கொண்டிருக்க...... இரண்டாம் இடத்துக்கு ஓடிக் கொண்டிருக்கும் அவனை காலம் மிக உணர்வு பூர்வமாக பார்த்துக் கொண்டிருக்கும்.
செருப்பு சொன்ன பாடத்தில் உணர்வுகளில் பூத்துக் கிடந்த கொப்புளங்கள்.........உலக வறுமையை செருப்பால் அடித்தே சொன்னது. ஒரு பிஞ்சுக் கால்கள் இன்னொரு பிஞ்சுக் கால்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.
இறுதியில்.... ஓடிக் களைத்து பிய்ந்து நைந்து போன ஷூவை கழற்றி விட்டு புண்ணாகி கொப்பளித்து விட்ட கால்களை நீர்த்தொட்டிக்குள் இறக்குகிறான் அலி. நீரின் மிதமிதப்பில் ஆசுவாசம் தேடுகின்றன அந்த பாதங்கள். சில நொடி அமைதிக்கு பின் உள்ளிருந்து நீந்திக் கொண்டே வரும் தங்க மீன்கள் அவன் கால்களை முத்தமிட ஆரம்பிக்கின்றன. செருப்புக்கு ஓடிய கால்களுக்கு அந்த மீன்களின் குறுகுறுப்பு பேரமைதியை வர வைக்கிறது. செய்வதறியாது.... அந்த தொட்டியின் அருகே அவன் அமர்ந்திருக்கும் காட்சி கால சித்திரமாக மாறி விடுகிறது.
ஆனால் தூரத்தில் எங்கோ அவனின் காலடி சத்தங்கள் மட்டும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
Film: Children of Heaven
Director: Majid Majidi
Language: Persian
Year: 1997 ‧ Drama/Family
கவிஜி

No comments:

Post a Comment