கேரளத் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஷியாம். என்றாலும் இவரது பூர்வீக ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாசரேத். ஆனால் இவரது நினைவு தெரிந்த நாளிலிருந்து சென்னையில்தான் வளர்ந்தது படித்தது எல்லாம். லால்குடி ஜெயராமிடம் முறையாக வயலின் கற்றவர்..
இசையமைப்பாளர் ஷியாம் "மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்" பாட்டைக் கேட்டதுமே "அடடா இளையராஜா என்னமா இசையமைத்திருக்கிறார்" என்று என் காது படச் சொன்னவர்கள் உண்டு. இன்னும் அப்படியே நம்புபவர்களும் உண்டு. ஆனால் அந்தப் பாடல் இடம்பெற்ற "மனிதரில் இத்தனை நிறங்களா" படத்தின் இசையமைப்பாளர் ஷியாம்.
இந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு பின்னணியில் ஒலிக்கும் பெண் குரல் எஸ்.பி.சைலஜாவுக்கு இதுவே முதல் பாடலாக அமைந்தது. இதே படத்தில் "பொன்னே பூமியடி" அந்தக் காலத்து இலங்கை வானொலி நினைவுகளைப் பலருக்குக் கிளப்பி விடும் அழகான பாட்டு. எஸ்.ஜானகியும் வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய இசைப் பட்டறையில் விளங்கிய வாத்திய விற்பன்னர் சாமுவேல் ஜோசப் தான் இந்த ஷியாம். கேரளத் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஷியாம். என்றாலும் இவரது பூர்வீக ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாசரேத். ஆனால் இவரது நினைவு தெரிந்த நாளிலிருந்து சென்னையில்தான் வளர்ந்தது படித்தது எல்லாம். லால்குடி ஜெயராமிடம் முறையாக வயலின் கற்றவர்.1954-இல் கிருத்தவக் கல்லூரியில் பி.ஏ., படித்துக் கொண்டிருந்தபோது தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய இசையைக் கற்றார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் இவரும் வகுப்புத் தோழர்கள். இசை மீது ஆர்வத்தால் சட்டப்படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு திரையுலகில் நுழைந்தார். அன்றைய பிரபல இசையமைப்பாளர்களான சி.என்.பாண்டுரங்கம், எஸ்.தக்ஷிணாமூர்த்தி ஆகியோருடனும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி ஆகியோருடனும் உதவியாளனாக இருந்து இசையறிவை வளர்த்துக் கொண்டேன். இவர் தனியாக இசையமைத்த முதல்படம் “அம்மா-அப்பா”. இப்படம் நடிகர் ரவிச்சந்திரன் – ஷீலாவின் சொந்தப்படம். பிறகு ஷீலாவின் மூலமாக மலையாளத் திரையுலகில் நுழைந்தார்.
இந்தி இசையமைப்பாளர் சலீல் சவுத்ரியிடம் பல படங்களுக்கு உதவியாளனாகப் பணிபுரிந்ததனால் இவரது இசையமைப்பில் இந்தி மெட்டு சாயல்கள் காணப்படும்.
ஷியாம் மேதமை நிறைந்த இசையமைப்பாளர். அவருடைய பாட்டுகளுக்கு சில தனித்தன்மை உண்டு. முழுமையாகவே மேலைநாட்டு இசைப்பாணி கொண்டவை. ராக், ப்ளூஸ் போன்ற பாணியிலும் இசையமைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் கிளாஸிக் பாணியில்தான். ஆனால் அதை மிகத்திறமையாக இந்திய இசை போல ஆக்கிவிடுவார். அந்தக் கதைச்சந்தர்ப்பத்துக்கு முழுமையாகவே ஒத்துவரும்படி அந்த இசை அமைந்திருக்கும்.
சலீல் சௌதுரிக்கு நிறைய சீடர்கள் உண்டு. ஆர்.கே.சேகர், அவருடைய மகன் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள். ஆனால் மிகச்சிறந்த சீடர் ஷியாம்தான். அர்ப்பணிப்புள்ள சீடர் மட்டுமல்ல, அவரிடம் நெடுங்காலம் இருந்தவர். அவருடைய அந்த மரபை முன்னெடுத்தவர் சலீல் சௌதுரி பாடலில் எதிர்பாராத நோட்டுகள் விபரீதமான திருப்பம் போல வருவதுதான் அழகு.
மலையாளத்தில் அவருடைய சாதனைப்பாடல்கள் ஏராளமாக உள்ளன. பல பாடல்களை இங்கே உள்ள இசையமைப்பாளர்கள் திரும்பப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் அடிப்படையில் வயலின் கலைஞர். வயலினில் ஒரு மேதை என்றுதான் சொல்வேன். அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே வயலின் நோட்டுகள் கொண்டவைதான். உதாரணமாக இந்த மாந்தளிரே பாடலில் மிகக் கவர்ச்சியான இடம் மாந்தளிரே மயக்கமென்ன உன்னை தென்றல் தீண்டியதோ என்ற வரியிலுள்ள தென்றல் என்ற சொல். அது ஒரு சரியான வயலின் நோட். கேட்கக்கேட்க புதுமையாக உள்ளது அது. என்னைப்போல் என்ற எதிர்நோட்டும் வயலினுக்கு உரியதுதான். நிறையப்பாடல்களை வயலினாகவே கேட்டு ரசிக்கலாம்.
எஸ்.பி.ஷைலஜா, கோவை முரளி, ராஜ்குமார் பாரதி, ஹரன் மற்றும் சுஜாதா போன்ற பாடகர், பாடகியர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
ஐதராபாத்தில் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படமான ‘The Naughty Pair” படத்திற்கு இசையமைப்பாளர் இவரே.
இவரது இசையமப்பில் 1972-இல் உருவான ‘கருந்தேழ் கண்ணாயிரம்’ என்ற மாடர்ன் தியேட்டர்சாரின் படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோரமா, சதன் ஆகியோர் இணைந்து பாடிய ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ என்ற பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது. ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் 1976-இல் வெளிவந்த ‘உணர்ச்சிகள்’ படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி இணைந்து பாடிய ”நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்” என்ற பாடலும் பிரபலம்.
இதே ஆண்டில் வெளிவந்த மனிதரில் இத்தனை நிறங்கள் படத்தில் இடம்பெற்ற ‘மழைதருமோ என் மேகம்’, பொன்னே பூமியட என்ற பாடலின் மெட்டினை ஒரு மலையாளப் படத்திற்கும் பயன்படுத்தியிருந்தார். 1979-இல் ‘பஞ்சகல்யாணி’ என்ற படத்திற்கு இசையமைத்தார். இதே ஆண்டில் நீ சிரித்தால் நான் சிரிப்பேன் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘உன்னைப் படைத்ததும் பிரம்மன் ஒருகணம் மயங்கி நின்றுவிட்டான் என்ற பாடல் அனைவரையும் மயங்கச் செய்தது. இதே ஆண்டில் வெளிவந்த ‘தேவதை’, ‘நான் நன்றி சொல்வேன்’, ‘தேவைகள்’ முதலிய படங்களின் பாடல்களும் மிகவும் வரவேற்பைப் பெற்றன.
‘மற்றவை நேரில்’ [1980], ‘வா இந்தப் பக்கம்’ [1981], ’இதயம் பேசுகிறது’ [1982], குப்பத்துப்பொண்ணு [1982],’கள்வடியும் பூக்கள்’, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது [1983], நன்றி மீண்டும் வருக, குயிலே குயிலே [1984] மலையாளத்தில் இப்படம் கூடினெத்தேடி என்ற பெயரில் வெளியானது, குழந்தை ஏசு [1984], நலம் நலமறிய ஆவல் [1984], சந்தோஷக்கனவுகள் [1985], விலாங்கு மீன் [1985], பாசம் ஒரு வேஷம் [1987],விலங்கு[1987], சலனம் [1987], ஜாதிப்பூக்கள்[1987], கல்லுக்குள் தேரை [1987] போன்ற படங்கள் ஷியாமின் இசை ஞானத்தை வெளிப்படுத்திய படங்கள்.
இவருக்கு மனைவியும் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் என 3 குழந்தைகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவிலும் மகள் பாலக்காட்டிலும் உள்ளனர்.
18.11.1983 ஜெமினி சினிமா இதழிலிருந்தும், இலங்கை வானொலி வர்த்தக சேவை இன்னிசைச் சுவடிகள் நிகழ்ச்சியிலிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
நாடக உலகில் இருந்து வந்தாலும் எண்பதுகளில் தன் படங்கள் ஒவ்வொன்றையும் சற்று மாறுதலான வடிவத்தில் கொடுத்துக் கவனிக்க வைத்தார் இயக்குநர் மெளலி.
No comments:
Post a Comment