Search This Blog

Sunday, May 22, 2016

பூண்டு குழம்பு !!


என்னென்ன தேவை?
சின்ன வெங்காயம் -100 கிராம்
தக்காளி -1
பூண்டு -50 கிராம்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லித்தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
புளி-தேவையான அளவு
தாளிக்க...
எண்ணெய் -தேவையான அளவு
கடுகு -1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோல் உறிக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிய பின் புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டை போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பின்னர் அதில் தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு மற்றும் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான காரக்குழம்பு தயார்.

No comments:

Post a Comment