நட்சத்திரங்களின் நிலைப்பாட்டை வைத்து குறிக்கப்படும் ஒருவரது இராசி நட்சத்திரத்தை வைத்து அவரது வாழ்க்கை, உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் குறித்த தகவல்களை அறிய முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் இலட்சியம், உறுதி, இயக்க நிலை மற்றும் வெளிப்படையாக பேசுதல் போன்றவற்றில் சிறந்து காணப்படுவார்கள். வெளியிடங்களுக்கு சென்று வருதல், ஆக்டிவாக இருப்பது போன்றவற்றில் துடிப்புடன் இருக்கும் இவர்கள் காவல், ஊடகம் போன்ற துறையில் சிறந்து
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கும் மனோபாவம் கொண்டுள்ளவர்கள். மேலும் நிலையான வாழ்க்கையை விரும்பும் குணம் கொண்டவர்கள். பொறியியல், கணக்காளர், கணினி சார்ந்த வேலைகள், வழக்கறிஞர், மருத்துவம் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
மிதுனம்:
இவர்கள் ஒரே இடத்தில் அன்றாடம் செய்யும் சலிப்பான வேலைகளை செய்வதில் நாட்டம் காண்பிக்கமாட்டார்கள். வெளியிடங்களுக்கு சென்று சுற்றி சுற்றி செய்யும் வேலைகளே இவர்கள் விரும்புவர்கள். டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டட வடிவமைப்பாளர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
கடகம் :
கடக ராசிக்காரர்கள் இயற்கையை விரும்பும் நபர்கள். சந்தோசமான சூழலுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள். கால்நடைமருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், மனித வள ஆர்வலர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
சிம்மம் :
தலைமை குணம் மற்றும் எளிதாக மற்றவரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். தனியாக எதையும் செய்து முடிக்க முனையும் பக்குவம் கொண்டவர்கள்.
மற்றவர்கள் இவர்களை ஆள விரும்பமாட்டார்கள். முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுய தொழில், அரசியல் போன்றவற்றில் இவர்கள் சிறந்து செயல்படுவார்கள்.
கன்னி:
குழுவாக வேலை செய்ய விரும்பும் நபர்கள் கன்னி ராசிக்காரர்கள். எதையும் கட்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என எண்ணுவார்கள். எழுத்தாளர், ஆசிரியர், கணக்காளர், விமர்சகர், தரவு ஆய்வாளர் போன்ற வேலைகளில் இவர்கள் சிறந்து காணப்படுவார்கள்.
துலாம்:
ராசிக்காரர்கள் துடிப்பானவர்கள். மக்களை டீல் செய்வதில் வல்லவர்கள். வாடிக்கையாளர் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு, மேலாண்மை போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
விருச்சிகம் :
இவர்களிடம் உள்ளுணர்வு மற்றும் படைப்புத்திறன் அதிகமாக இருக்கும். எதையும் சொந்தமாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மருத்துவம், விஞ்ஞானி, துப்பறியும் துறை, வழக்கறிஞர், ஆராய்ச்சி, ஊடகம் போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாக செயலாற்றுவார்கள்.
தனுசு :
தீர்கமான முடிவுகளை எடுப்பதில் தனுசு ராசிக்காரர்கள் சிறந்து செயல்படுவார்கள். நல்ல எண்ணத்தை தன்னை சுற்றி இருக்கும் இடங்களில் பரப்ப செய்வார்கள். மக்கள் தொடர்பு, திரைப்படம் / தொலைக்காட்சி, ஆசிரியர், போன்ற பணிகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
மகரம் :
நேரம் கடைபிடிப்பது, பணத்தை சரியாக முதலீடு செய்வது போன்றவற்றில் மகர ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். இவர்களுக்கு ஏற்ற பணிகள், மேலாளர்கள், ஆசிரியர், வங்கி, அரசு வேலைகள், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் போன்றவை ஆகும்.
கும்பம்:
புதிய ஐடியாக்களை வெளிப்படுத்துவது, எதிர்கால நோக்கத்துடன் செயல்படுவதில் இவர்கள் வல்லவர்கள். ஒரே வேலையில் ஈடுபட விரும்பமாட்டார்கள். தொழில் புரிவது, கலை, கண்டிபிடிப்பு போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
மீனம் :
கற்பனை மற்றும் படைப்பு திறன் கொண்டவர்கள் மீனம் ராசிக்காரர்கள். மக்கள் தொடர்பு சார்ந்த வேலைகளில் சிறந்து செயல்படுவார்கள். உளவியல், மக்கள் மேலாண்மை, கலை போன்றவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்.
- See more at: http://www.lankatamil.com/3411.html#sthash.8QoxJd15.pd3U1pwQ.dpuf
No comments:
Post a Comment