Search This Blog

Saturday, May 21, 2016

மறுபிறவி பற்றி பகவத்கீதா


2.13. ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப்பிராயமும் இளமையும் மூப்பம் தொன்றுகின்றனவோ அவ்வாறே மற்றொரு சரீரப்பிறப்பும் தோன்றுகிறது. தீரன் சாவை எண்ணி கலங்க மாட்டான்..
2.22 ஆத்மா பிறப்பதும் இல்லை எக்காலத்தம் இறப்பதும் இல்லை.
இவன் ஒருமுறை இருந்து பின்னர் இல்லாது போவதும் இல்லை. இவன் பிறப்பற்றவன் இறப்பற்றவன். உடப்பு அழிந்து போனாலும் இவன் அழிவதில்லை.
2.23 நைந்த துணிகளைக்களைந்து விட்டு மனிதன் புது துணிகளை போடுவது போல .ஆன்மா நைந்த உடலைக் களைந்து புது உடலை எடுக்கிறது.
2.41ஆசைவயப்பட்டவர்கள் சொர்க்க இன்பத்தில் மதிமயங்கியவர்களாய் பல கிரியைகளைச் செய்கிறார்கள்.
இவர்கள் சொல்லுவதைக்கேட்டு மதிமயங்குவோருக்கு நிச்சயபுத்தி இல்லை. அர்ஜுனா நீ நிச்சய புத்தியுள்ளவனாக இரு
4.5.அர்ஜுனா எனக்கு பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. நான் அவற்றையெல்லாம் அறிவேன் நீ அறியவில்லை.
6.35.மனத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அது எப்போதும் சலனப்படுவது. ஆனாலும் பிற்சியாலும் பற்றற்ற நிலையாலும் மனத்தை கட்டுப்படுத்தலாம். மனத்தை கட்டுப்படுத்தியவனே யோகம் அடைகிறான்.
6.37. அர்ஜுனனின் சந்தேகம்
இவ்வாறு மனத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து அதில் ஒருவன் வெற்றிபெற முடியாமல் இறந்து பொனால் என்ன ஆவான்?
6.41. யோகத்தில் தவறியவர்கள் புண்ணியம் செய்தவர்களின் உலகத்தில் நீண்டநாள் வசித்து பின்னர். நல்ல மனம் உள்ள செல்வந்தர் வீட்டில் மீண்டும் பிறக்கிறான். அல்லது புத்திமான்களின் குலத்திலோ அல்லது யோகிகளின் குலத்திலோ பிறக்கிறான் தனது பழைய ஜென்ம பலனால் மீண்டும் யோகத்தை அடைய முயற்சிக்கிறான்
6.44 பாவம் அற்றவன் கடினமுயற்சி செய்தால் பல பிறவிகளில் உழைத்து பெறவேண்டிய பரகதியை(யோகத்தை) இப்பிறவியிலேயே அடைகிறான்.
யோகம் என்பது இறைவனுடன் ஒன்றுபடுதல்(முக்தி) யோகம் என்பது சித்த விரத்தி நிரோத (பதஞ்சலி யோக சூத்திரம்) சித்தத்தில் எழும் எண்ணங்களை அடக்கினால் யோகம் கைகூடுகிறது
8.15 சித்தி பெற்ற மகாத்மாக்கள் நிலையற்றதும் துன்பத்தின் உறைவிடமான மறுபிறப்பை மீண்டும் பெறுவதில்லை.
8.16 பிரம்மலோகம் வரையுள்ள உலகில் வாழ்பவர்களுக்கு மறுபிறப்பு உண்டு. என்னை அடைந்தவர்களுக்கு(முக்தி பெற்றவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.
=============
வேதம் பற்றிய கருத்து
வேதம் என்றால் அறிவு இந்த அறிவு என்றென்னும் இருந்துகொண்டே இருக்கிறது. புவியீர்ப்பு விசையை நியுட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்த புவியீர்பு விசை இருக்கிறது. நியுட்டன் அதை கண்டுபிடிக்காவிட்டாலும் அது என்றும் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே புத்தகத்தில் எழுதப்படவை மட்டுமே வேதம் மற்றவை வேதம் அல்ல என்பது தவறான கருத்து. வேதாந்தம் என்றால் இறைவனைப்பற்றிய அறிவு (ப்ரம்மஞானம்.) குறிப்பாக இறைவனை நேருக்கு நேர் கண்டவர்கள் இறைவனைப்பற்றி கூறும் வார்த்தைகளே வேதாந்தம். இந்த இறை அறிவு என்றும் இருக்கிறது. அது என்றென்றும் இருக்கும் இந்த உலகம் தோன்றயது முதல் வேதாந்தம் இருக்கிறது. இறைவனை காண்பவர்கள் ஏற்கனவே இருக்கும் வேதத்தை மக்களிடம் சொல்கிறார்கள். ரிஷிகள் என்பவர்கள் இறைவனை நேரில் கண்டவர்கள். இவர்கள் வேதத்தை புதிதாக எழுதவில்லை. ஏற்கவே இருப்பதை எடுத்துச்சொன்னார்கள்....

No comments:

Post a Comment