1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
4.திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
திருநீறை (விபூதி) மூன்று கோடுகளாக போடுவதன் தத்துவம்;-
மும்மலங்கலான ஆணவம் கன்மம் மாயை மூன்றையும் ஞானத்தினால் சுட்டெரித்து
நிர்மல நிலையினை அடைந்தவர் என்பதன் வெளிப்பாடாக மூன்று கோடுகள் போடப் படுகின்றன. மேலும் சூரிய கலை சந்திர கலை அக்னி கலை மூன்றையும் கடந்து மூச்சற்ற சுத்த நிலையினில் அருள் அனுபவம் பெற்றவர் என்பதையும் உணர்த்தும்.

No comments:
Post a Comment