ஒருவர் ஜனனம் ரிஷபம் லக்னத்தில் ஆகப்பெற்றால் ஜாதகர் பெரும்பாலான பெண்களால் விரும்பப்படுவர். ரிஷப லக்னத்தில் ஜனனமானவருக்கு பல தாரங்களை அடையப்பெறுவதோடு, தாரதோஷமும் அடையப்பெறுவர். மேலும், இவர்களது முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, மறுமனைவி அல்லது பலவித பெண்களுடன் தொடர்பு இருக்கக்கூடும். குடும்பப்பற்று/பாசம்/நண்பர்களிடம் (ஆண்/பெண்) பாசம்/நாசம் பெற்றும் தயாள குணம், தர்மம் செய்தல், பிறரை வசப்படுத்தும் இயல்பான குணம், 6-12-29 ஆகிய வயதுகளில், கொடிய நோயினால் அவதிப்படல், மரண கண்டம் ஆகியவை அடையப்பெறுவர் என்பது ஜோதிட சாஸ்திரமாகும்.
ரிஷப லக்னத்தில் ஜனனம் ஆன ஒருவரின் ஜாதகத்தில் ஆதிபத்தியம் பெற்ற சந்திரன் (மாரகாபதி) 8-க்கு உடைய குருபகவான் கெடுபலன்களையே அளிக்கவல்லார் என்பதாகும். சனிபகவான் மற்றும் சுக்கிரன் ஜாதகர் தீர்க்க ஆயுள் பலம் 75 வயது முதல் 105 வயது வரை அடையப் பெறுவர் என்பதும் ஜோதிட சாஸ்திரமாகும். மேலும் குருதசை/சந்திரன் தெசா நடைபெறும் காலத்தில், ஜாதகர் தாங்கொனா கஷ்டநஷ்டங்கள், பொன்/பொருள் விரயம், உறவினர்கள்/நண்பர்களின் பகை பெறல், வழக்குகள்-வியாஜ்ஜியங்கள் ஆகியவை அடையப்பெறுவர். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6-8-12ல் ஸ்தானங்களில் குருபகவான்/சந்திரன் மறைந்திருந்தால் ஜாதகரின் குரு/சந்திரன் திசையில் பெரிய மனிதர்களின் பாசம்/நேசம், பிரபலமான ராஜயோகத்தை அடைந்து, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை இறுதிவரை அடையப்பெறுவர்.
மேலும் ஜனன லக்னத்திற்கு, 9-ம் இல்லத்து அதிபதியும் (பாக்யாதிபதி), 10-ம் இல்லத்து அதிபதியும் (ஜீவனாதிபதி) ஆன, சனி மகாதிசையும் மற்றும் புதன் மகா திசையும்/இராகு மகாதிசையும்
நடைபெறுகின்ற காலங்களில் ஜாதகர் பலவிதமான யோகங்களை அளிக்கவல்லார் என்பதாகும். மேலும் ஜனன காலத்தில் லக்னம்/4-ம் இல்லம், 6-ம் இல்லம்/ 7-ம் இல்லம் மற்றும் 10-ம் இல்லங்களில், இராகு/சனிபகவான் அமையப்பெற்று அதன் தெசா நடைபெற்றால், ஜாதகர் மிக்க பிரபலமான யோகப்பலன்களை அடையப்பெற்று ஓர் உன்னதமான வாழ்க்கையை அடையப்பெறுவர் என்பதாகும்.

– ஜோதிடர் ஏ.கே ஆறுமுகம்
மரண கண்டமா
ReplyDelete