Search This Blog

Friday, April 29, 2016

தம்பதியர் நட்புடன் இருக்கும் ரகசியம்!


பதில் சொல்கிறார் கவிதையுலகில் மிகவும் ஃபிரெண்ட்லியான தம்பதியருள் ஒருவரான கவிஞர் சக்தி ஜோதி...

‘‘கணவன்_மனைவி உறவு ஃபிரெண்ட்லியா இருக்கணும்னா ஒரு மையப் புள்ளியை கண்டறியணும். மையப் புள்ளின்னதும், ஐய்யய்யோ இது ஏதோ நியூட்டன் ஃபார்முலா போலிருக்கேன்னு பயந்துடாதீங்க.
50 வருஷம் 60 வருஷம்னு சேர்ந்து வாழ்கிற தம்பதியருக்குள்ளேயும் கண்டிப்பா கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் எப்படி இத்தனை வருஷம் வாழ்ந்தாங்கனு பார்த்தா அவங்க குறிப்பிட்ட அந்த மையப்புள்ளியை அடையாளம் கண்டுகிட்டவங்களா இருக்கும்.
என் லைஃப்ல இருந்து சொல்றேன்... என் காதல் கணவர் சக்திவேல், எல்லா விஷயத்திலும் செம பங்சுவல். காலைல நாலுமணிக்கு எழுந்து உடற்பயிற்சி, அடுத்து கொஞ்ச நேரம் ஷட்டில் விளையாட்டுன்னு ஆரம்பிச்சு அவரோட ஒவ்வொரு வேலைகளுக்கும் டைம் செட்யூல் போட்டுக்கிட்டு இயங்குவார்.
ஆனா, நான் அவருக்கு நேர் எதிர். இலக்கிய மேடைகளுக்கு மட்டும்தான் டைமுக்கு போவேன். மத்தபடி எப்போ வேணா தூங்குவேன், எப்போ வேணா எழுந்துப்பேன். நினைச்சா வாக்கிங், மூடு செட்டானா விளையாட்டுன்னு இருக்குற டைப் நான்.
சைவ உணவும் நவதானிய உணவும்தான் அவரோட சாய்ஸ். எனக்கு அசைவம் இல்லாம இருக்க முடியாது. 
இப்படி நிறைய விஷயங்கள்ல நானும் அவரும் எதிரெதிர் துருவங்களா இருந்தும், எங்களால எப்படி ஃபிரெண்ட்லியா இருக்க முடியுது. குறிப்பிட்ட அந்த மையப் புள்ளியை கண்டு பிடிச்சதாலதான்!
எனக்கு எந்த சூழல்லயும் எல்லோரையும் நேசிக்கப் பிடிக்கும். மரபுவழி விவசாயத்துல எனக்கு ஈடுபாடு அதிகம். மரம் செடி கொடிகள், பறவைகள் மேலே செம லவ் வெச்சிருக்குற பார்ட்டி நான். என்னோட பார்ட்னருக்கும் இதே மாதிரியான லவ்ஸ் உண்டு. 
இந்த ஒத்த ரசனைதான் எங்களுக்குள்ள இருக்குற மையப் புள்ளி, ஒவ்வொரு கணவன் மனைவிக்குள்ளேயும் இது இருக்கும். மத்த எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு இந்த மையப் புள்ளியை மட்டும் நேசிக்க, மதிக்கஆரம்பிச்சிட்டா போதும். குறையெல்லாம் நிறையாவே தெரியும். அப்புறமென்ன லைஃப் இஸ் ஆல்வேஸ் வெல்தான்!

No comments:

Post a Comment