போட்ஸ்வானாக் குடியரசு முற்றிலும் பிறநாடுகளால் சூழப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடு. முன்னர் இந்த நாடு பிரித்தானியப் பாதுகாப்பில் இருந்த பகுதி. தென்கிழக்கிலும் தென் ஆப்பிரிக்காவும் மேற்கே நமிபியாவும், வடக்கே சாம்பியாவும், வடகிழக்கே சிம்பாப்வேயும் உள்ளது. இந்நாட்டின் பொருளியல் தென் ஆப்பிரிக்கவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.
போட்சுவானா தமிழர் எனப்படுவோர் இலங்கைத் இந்திய தமிழர்கள் தமிழ்ப் பின்புலத்துடன் போட்சுவானா நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். 20 ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் தென் ஆபிரிக்காவில் இருந்த இந்திய தமிழர்கள் போட்சுவானாவுக்கு வணிக நோக்கில் இடம்பெயர்ந்தனர். இங்கு வாழ்பவர்களில் பெரும்பான்மையானோர் இவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். தொழில் வாய்ப்புக்கள் தேடி மிகவும் பின்னர் இடம்பெயர்ந்தோரும் உள்ளனர். போர்சூழல் காரணமாகவும் தொழில் ரீதியிலும் இலங்கைத் தமிழரகள் 1985க்கு பின் அங்கு குடியேறியுள்ளார்கள்
நிர்வாகத்துறை, தொழில்நுட்பம், மருத்துவம், பல்கலைக்கழகம், மற்றய துறைகளில் எல்லாம் மிகக்குறுகிய காலத்தில் இலங்கைத்தமிழர்கள் அதியுயர் பதவிகளில் இருக்கிறார்கள். கடந்த 3 வருடங்களாக நான் அந்நாட்டின் திட்டமிடல் அபிவிருத்தி ஆலோசகராக இருப்பதில் மகிழ்ச்சி.
பல தமிழ்ச்சங்கங்கள் இந்துக்கோவில்கள் அங்கு உண்டு, போட்சுவானா தமிழ் கலாச்சார கழகம் ஒன்றும் இங்கு இயங்குகிறது.
மொத்தம் 2 மில்லியன் மக்கள்தொகை, 5000 இந்தியத் தமிழரும், 2200 இலங்கைத் தமிழரும் அங்கு இருக்கிறார்கள். முக்கிய வியாபாரம் இரத்தனக்கற்கள்தான்.
அதிகூடிய விலங்குகளும் காடு சார்ந்த பிரதேசமும் இங்கு உண்டு. நான் பலநாடுகளில் பல்வேறு விலங்குகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இங்குள்ள விலங்குகள் பெரியதாகவும் உயரமானதாகவும் தோற்றமளிக்கும். இப்படி உயரமான யானைகளை நான் வேறு எந்த நாட்டிலும் பார்த்ததில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ளதைப் போன்று பனைமரங்கள் நிறைய உண்டு. கள்ளுத்தான் அவர்களது முக்கிய சோமபானம். விலங்குகள் கூட கள்ளருந்திவிட்டு மனிதனை விட மோசமாக அட்டகாசம் செய்யும்...
சில படங்கள் உங்கள் பார்வைக்கு!!!
No comments:
Post a Comment