Search This Blog

Tuesday, November 17, 2015

மகள் உடலில் பருவம் மேடிட தொடங்கும் பொழுது

மகள் உடலில்
பருவம்
மேடிட தொடங்கும் பொழுது
அம்மா தடுமாறுகிறாள்
தகுந்த ஆடைகள் கொடுக்கவும் 
உள்ளாடைகளை அறிமுகம் செய்யவும்

புதிர்கள் தொடங்குகிற இளமை
ஒருவருக்கொருவர்
பொறுமையிழக்கும்
கணங்களைக் கொடுக்கிறது
என்றபோதும்
மகளின் புதிய உலகிற்கு
அம்மாவே கதவாக இருக்கிறாள்
மகள் வளர்கிறாள்
அம்மாவைப் போலவே
வளரிளம் இரகசியங்களோடும்
வலிகளோடும்
பெண்மையின் பாடலில்
இருவரும் நெருக்கமாகிறார்கள்
உடலின் திறப்பினை
மகள் உணரத் தொடங்கும்
ஒரு நாளில்
அம்மாவின் நினைவில்
மகள் கசிகிறாள்.
Courtesy : Painting - Faiza Khan
Sakthi Jothi

No comments:

Post a Comment