ஒரு பெண்
தன்னுடைய துயரத்தின் சாயல்
மகள்மீது படிவதை
ஒருபோதும் விரும்புவதில்லை
தன்னுடைய துயரத்தின் சாயல்
மகள்மீது படிவதை
ஒருபோதும் விரும்புவதில்லை
மகளின் விருப்பங்களைச்
சாத்தியப்படுத்தவே
ஒவ்வொன்றையும்
தேடிக்கண்டடைகிறாள்
சாத்தியப்படுத்தவே
ஒவ்வொன்றையும்
தேடிக்கண்டடைகிறாள்
முந்தின பருவத்தில்
அவளின் உள்ளிருந்து தெறித்துப்
பரவிய வெளிச்சத்தை
புதிய நிறத்தில்
மகளிடம்
உணர்த்திவிட விழைகிறாள்
அதனாலேயே
கதகதப்பை உணர்ந்தபடி உறங்குகிற
மகளின் கையை விலக்கி
பணியிடம் கிளம்புகிறாள் பெண்.
அவளின் உள்ளிருந்து தெறித்துப்
பரவிய வெளிச்சத்தை
புதிய நிறத்தில்
மகளிடம்
உணர்த்திவிட விழைகிறாள்
அதனாலேயே
கதகதப்பை உணர்ந்தபடி உறங்குகிற
மகளின் கையை விலக்கி
பணியிடம் கிளம்புகிறாள் பெண்.
Courtesy - painting: Rajesh Shah

No comments:
Post a Comment