பெண்ணின் அகபுற உலகினை துல்லியமாக அவதானித்து அவளுக்கான நியாயங்களோடு மனதை சூழ வியாபித்து தன் பெண்மையாலும் தாய்மையாலும் ஒரு புதிய வெளிச்சத்தை உருவாக்கக் கூடியது.
அம்மா, மகள் உறவின் குரலானது, நெருக்கமான நேசி்ப்பில் விசாலப் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கும். அவர் கதைகளில் உணவும் ருசியும் உணர்வுகளின் பசியை ஆற்றுகின்றன.
இசை மாயத் துணைவனைப்போல் அம்பையை விலகாமல் அணைத்திருக்கும்.
இயற்கையும் பயணங்களும் அவரது சாளரங்களாகும். அவருடைய கதைகளைப் படிக்கின்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் எழுகின்ற கேள்விகளுக்கு மிக நேர்மையான பதிலை கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவரது காலத்தில் அவர் எதிர்கொண்டுவந்த அத்தழும்புகள், இன்று எழுதும் பெண்களுக்கு படிப்பினையை நம்பிக்கையைத் தரும் அடையாளமாகும். வலிமைமிக்க அவரது எழுத்தானது, சமூகத்தின் முன் நிகழ்த்தப்பட்ட புரட்சிமட்டுமல்ல, முழுமையான அர்ப்பணிப்பும்கூட.

அம்பையின் புன்னகை மெல்லத் தொட்டுவருடும் இசையென்பேன்.
அது நீடுழி வாழ வேண்டும்.!!
Anar Issath Rehana
No comments:
Post a Comment