கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
---இப்பாடலை எழுதியவர்- காளமேக புலவர்
.தமிழிலிருந்து தமிழாக்கமாய் கீழ்கண்ட
கவிதையாக்கம -----அமிர்தம் சூர்யா
கவிதையாக்கம -----அமிர்தம் சூர்யா
காலம்
***********
***********
வெளிச்சம் பூசிய பொழுதில்
நிற்காது காக்கை முன் ஆந்தை
நிற்காது காக்கை முன் ஆந்தை
ஆந்தையைக் கண்டொதுங்கும்
கருமை சுமக்கும் காலங்களில் காகம்
கருமை சுமக்கும் காலங்களில் காகம்
ஒத்துழைக்க மறுத்து காலம்
கண்டனம் காட்டும் கணங்களில்
பகை நீக்கம் செய்யாமல்
கைகட்டி காத்திருப்பான்
கற்பக சோலையின்
இந்திர இறைவனும்.
கண்டனம் காட்டும் கணங்களில்
பகை நீக்கம் செய்யாமல்
கைகட்டி காத்திருப்பான்
கற்பக சோலையின்
இந்திர இறைவனும்.
நீ….
புவி காக்கும் வினை முடித்து
கரையேறுவதாயின்
கைப்பற்றிக்கொள்…
கரையோரம் நிற்கும் கொக்கின்
காத்திருப்பை
காத்திருப்பை..
புவி காக்கும் வினை முடித்து
கரையேறுவதாயின்
கைப்பற்றிக்கொள்…
கரையோரம் நிற்கும் கொக்கின்
காத்திருப்பை
காத்திருப்பை..
(எனக்கு பிடித்த நான் ரசித்த காளமேக புலவரின் இந்த ஒரு பாடலை எனக்கு தெரிந்த என் கவிதை மொழியில் தமிழிலிருந்து தமிழாக்கமாய்…நான் எழுதிப் பார்க்க அதை 97 ல்.காலம் என்ற தலைப்பில்...சுந்தரசுகன் என்ற சிற்றிதழில் பிரசுரித்தார...காலமாகிப் போன என் நண்பர் சுகன்)
No comments:
Post a Comment