போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார்போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார் என்பது பற்றிய குறிப்புத்தான் இந்தக்கதை. அதாவது குகைச் சுவரை உற்று நோக்கியவண்ணம் ஒன்பது ஆண்டுகள் தவமிருந்தார் என்பதுதான் இதில் முக்கியச்செய்தி.
இந்தப்பயிற்சியின் இரகசியம் என்ன வென்பது பற்றி அறியவேண்டுமானால் நாம்திரும்பவும் இந்திய யோகிகளிடம் வரவேண்டும். ஆம் யோகக்கலையின் அடிப்படைதெரியவேண்டும்.
அஷ்டாங்க யோகத்தின் ஆறாவது படியான "தாரணை" பற்றித் தெரியவேண்டும். அட்டாங்கயோகத்தின் இறுதி நிலையான சமாதியினை அடைவதற்கு தாரணைப்பயிற்சி மூலம் சாதனை பயின்று புத்த நிலையினை அடைந்தார் என்பது தான் இந்தக்கதையின் உண்மை விளக்கம். சமாதி எனும் இந்த புத்த நிலைச் சித்தியினைப் பெறுவதற்காகத்தான் ஒன்பது வருடங்கள் போதிதர்மர் குகைச் சுவரினை உற்றுப்பார்த்த வண்ணம் "திராடகச்"சாதனையிலிருந்தார். திருமூலரது திருமந்திரம், போகர் 7000, அகஸ்தியர் பாடல்கள்,பதஞ்சலி முனிவரது யோக சூத்திரம், ஔவையாரின் ஞானக்குறள் என்பவற்றில் தாரணையைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன.
மகரிஷிபதஞ்சலியின் உபதேசப்படிக் "கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்றிருக்கும் சித்தமே தாரணை" எனப்படும், அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளுக்கும் மூலமான சித்த விருத்திகளை உருவாக்கும் சித்தத்தினைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலைகொள்ளச்செய்யும் செயல் முறைதான் "தாரணை" எனப்படும்.12 வினாடிகள் சித்தம் செயல்படாமல் இருந்தால் அது ஒரு தாரணை எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு தியானம் எனப்படுகிறது.
யோகத்தின் ஆறாவது நிலையான "தாரணை"யே, நோக்கு வர்மத்தின் அடிப்படை , "தாரணா" சித்தியின் ஒரு பிரயோகம்தான் நோக்குவர்மமே ஒழிய அது தனியாக பயிலவேண்டிய கலை அல்ல, யோகத்தின் படிநிலையில் அடையப்படுகின்ற ஒரு உப அன்பளிப்புதான் நோக்குவர்மம். இயமம், நியமம், பிரத்தியாகாரம் பழகுவதாலும், தனது நோக்கம் சமாதிநிலையே என உணர்ந்து கொண்டதாலும், ஒரு தகுதி வாய்ந்த யோகி, எந்தச் சூழ்நிலையிலும் இந்த சித்தியினை மற்றவரைத் தாக்குவதற்கு உபயோகிப்பதில்லை. மாறாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தவத்தால் தான் பெற்ற தனதுப் பிராண சக்தியை, அறிவாற்றலைத், தகுதி வாய்ந்த மாணவர்களுக்குப் பரிசாகப் பகிர்ந்து கொடுக்கவும், நோயால் அவதிப்படும் மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகவும் இந்தத் தாரணசித்தி இன்றளவும் யோகியரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment