Search This Blog

Thursday, March 7, 2013

எக்ஸாம் டைம் டிப்ஸ் - அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்





பரீட்சை சமயங்களில் குழந்தைகளுடன் கூடிய வரை அமைதியாக பேசுங்கள். அவர்களை தேவையில்லாமல் எதற்காகவும் கடிந்து கொள்ள வேண்டாம்.



படிக்கலை படிக்க மாட்டான் போன்ற நெகட்டிவ் வார்த்தைகளை சொல்லாதீர்கள். கூடவே இருந்து சப்போர்ட் செய்ய முடியாத பெற்றோர்கள் மாரல் சப்போர்ட்டாக அவ்வப்போது போனில் என்ன படிக்கிறான் என்று அன்பாக விசாரிக்கலாம். நம்முடைய ஆபிஸ் டென்ஷனையும் கோபங்களையும் ஒரு நாளும் குழந்தைகள் மீது சுமத்தக் கூடாது.


ஸ்பைஸி உணவுகளைத் தவிர்த்து, நல்ல சத்தான உணவை மிதமாகத் தரவும். பழங்கள் காய்கறிகள் அவர்கள் டயட்டில் தினமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். எப்பவும் புத்தகங்களுடம் மட்டும் இருக்காமல் அவ்வப்போது ரிலாக்ஸ் செய்யச் சொல்லலாம்.

படித்தவற்றை ரிவைஸ் செய்ய சிறு குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு அதை படிக்கலாம்.

கடைசி நிமிடம் படிப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். முடிந்தவரை எல்லாவற்றையும் முன்னரே படித்துவிடுவதுதான் நல்லது. எந்த சப்ஜெக்ட் வீக் எது சூப்பர் என்று கவனம் செலுத்த வேண்டிய பாடங்களை ப்ராயரடைஸ் செய்து கொள்ளவும்.


பரிட்சை எழுத‌ பேனா மை ஜெல் பேனா என்று இரண்டு அல்லது மூன்று எடுத்துத் தரவும். ஸ்கூல் பேகில் எல்லாம் எடுத்துவைக்கப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்து அனுப்ப வேண்டும்.


பரிட்சை எழுதும் முன் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இறை நம்பிக்கையே இல்லாதவர்களாக இருந்தாலும் கூட கண் மூடி அமைதியாக ஒரு நிமிடம் தியானம் செய்ய சொல்லுங்கள்.


டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப முக்கியம். தெரிந்த கேள்விகளை முதலில் எழுதிவிட்டு, தெரியாத விடையோ அவுட் ஆஃப் சிலபஸ் கேள்விகள் வந்தால் கூட அதை விட்டுவிடாமல் எழுதச் சொல்லுங்கள். அதற்கு நிச்சயம் மார்க் இருக்கும்.


அந்த நாளைய பரிட்சையை சரியாக எழுதவில்லை என்றாலும், மனம் தளர்ந்துவிடாமல் அடுத்த நாள் பரிட்சைக்கு தயார் படுத்த சொல்லுங்கள். 

இதெல்லாம் அவங்க டிபார்ட்மென்ட் என்று சொல்லும் அப்பாக்களின் கவனத்துக்கு - நீங்கள் செய்ய வேண்டிய ஆகச் சிறந்த உதவி அம்மாக்களை எனக்கு இன்னிகு மஷ்ரூம் ப்ரை சாப்பிடணும் போல இருக்கு, அது வேண்டும் இது வேண்டும் என்று டிஸ்டர்ப் செய்யாதீர்கள்.

அன்பும் அக்கறையும் கூடுதல் கவனிப்பு மட்டுமே நம் குழந்தைகளுக்குத் தேவை. அதுவே அவர்களின் மனதுக்கு உற்சாக டானிக். 

ஆல் தி பெஸ் குட்டீஸ். கலக்குங்க....

No comments:

Post a Comment