உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது.
மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சிலவற்றைப் பார்ப்போமா!!! மோனாலிசா யார்? வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா. ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை புன்னகையின் இரகசியம் புன்னகையின் இரகசியம் ,monalisa smile secrets,monalsa punnakai நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசா கர்ப்பிணியா? மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையிலேயே லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். மோனாலிசா ஒரு ஆணா? சில ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர். ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது என்பதாலேயே தான்.
மேலும் சில ஆய்வாளர்கள் மோனாலிசாவின் ஓவியத்தை ஆராய்ந்ததில், இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது என்று சொல்கிறது. டா வின்சி தான் மோனாலிசா! dsavinci,monalisa,மோனாலிசா ஓவியமானது, டா வின்சி ஒருசில ஆராய்ச்சியாளர்கள், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஓவியத்தை நன்கு ஆராய்ந்ததில், டா வின்சிக்கும், ஓவியத்திற்கும் உள்ள ஒற்றுமை நன்கு புலப்படுவதாகவும் கூறுகின்றனர்.
ஆமோன் மற்றும் எலிசா: ஆண் மற்றும் பெண் சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர். ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர். ஏன் புருவமில்லை? மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. எனவே இது ஒரு பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கோல்டன் டிரையாங்கிள் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். இதனைப் பற்றி விரிவாக டான் ப்ரௌன் அவரது நாவலில் தெளிவாக கூறியுள்ளார்.
Related Posts : Images Photos and Paintings
No comments:
Post a Comment