சாவேசின் 14 வருட கால சாதனைகள்
****************************** *****
1. சாவேசின் ஆட்சிக் காலத்தில், மனிதவள அபிவிருத்தி விரைவாக உயர்ந்தது. வேலையில்லாப் பிரச்சினை, வறுமை, குழந்தைகள் இறப்பு விகிதம் அரைவாசியாக குறைந்தது. (Human Development Reports, http://hdr.undp.org/en/ reports/global/hdr2011/ download/)
2. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு உதவுவதற்காக உணவுப் பங்கீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. சாவேஸ் பதவிக்கு வந்த காலத்தில், 15% மக்கள் போஷாக்கின்மையால் கஷ்டப் பட்டனர். ஐ.நா. வின் FAO அறிக்கையின் படி, இன்று வெனிசுவேலாவில் பசியால் வாடுவோர் யாரும் இல்லை. இலட்சக் கணக்கான வெனிசுவேலா ஏழைகள் வாழ்வில் முதல் தடவையாக மருத்துவ வசதி கிடைத்தது. தொலைதூர கிராமங்களில் கூட, மருத்துவர்கள் நியமிக்கப் பட்டனர். (FAO Report, http://www.fao.org/alc/file/ media/pubs/2012/panorama.pdf)
3. எழுத்தறிவின்மை முற்றாக ஒழிக்கப் பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபாவுக்கு அடுத்தபடியாக வெனிசுவேலாவில் தான் எழுதப், படிக்க தெரிந்த பிரஜைகளின் எண்ணிக்கை அதிகம். உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. இந்த தகவல்களை கொடுத்தது UNESCO.
4. சாவேஸ் பதவிக்கு வருவதற்கு முன்னர், பெரும்பான்மையான மக்கள் தேர்தலில் ஓட்டுப் போடுவதில்லை. வாக்குரிமையுள்ள மொத்த சனத்தொகையில், ஐந்தில் ஒருவர் வாக்காளராக பதிவு செய்யப் படவில்லை. (http:// lapupilainsomne.wordpress.com/ 2012/10/09/ chavez-los-mentirosos-y-el-infi erno-del-dante/)
சனத்தொகையில் ஒரு சிறிய பிரிவினர் தான் அரசியல் கொள்கைகளை
தீர்மானித்தார்கள். சாவேஸ் ஜனாதிபதியானதும் செய்த முதல் வேலை, ஒவ்வொரு
ஊரிலும் "பொலிவாரியன் குழுக்களை" அமைத்தார். அந்தக் குழுக்களின் முக்கியமான
வேலை, தேர்தலில் ஓட்டுப் போடுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச்
சொல்வது. அது தான் சாவேசின் "பொலிவாரிய புரட்சி". (http://www.emol.com/ documentos/archivos/2011/10/28/ 20111028141231.pdf)
சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்று அவதூறு செய்பவர்களின் நாட்களில், குறைந்தது
90% வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டுப் போடுகின்றார்களா? இந்தியாவில் எத்தனை
இலட்சம் பேர், பணத்துக்காகவும், இலவசங்களுக்காவும் தங்களது ஓட்டுக்களை
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அவை எல்லாம் ஜனநாயக தேர்தல்களா? 1998 ல்,
சாவேஸ் பதவிக்கு வருவதற்கு முன்னர், 60% மக்கள் ஜனநாயக தேர்தல்களில்
நம்பிக்கை வைத்திருந்தனர். 2011 ல் அது 77% மாக உயர்ந்தது.
5. சாவேசின் காலத்தில், ஒரு மூன்றாமுலக வறிய நாடான வெனிசுவேலா, பொருளாதார சுதந்திரம் அடைந்தது. IMF உடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. நாட்டின் பிரதானமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. கூட்டுறவுக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. முதலாளிகளுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், சில விதிகள் மட்டும் மாற்றப் பட்டன. மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கும் முதலாளிகள், அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அரச தலையீடு அதிகரித்தால், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்று உளறிக் கொண்டிருக்கும் பொருளாதார நிபுணர்கள் கவனிக்கவும். 1980 ம் ஆண்டில் இருந்து, வெனிசுவேலா பொருளாதாரம் இறங்குமுகமாக வீழ்ந்து கொண்டிருந்தது. சாவேஸ் பதவியேற்ற பின்னர், அந்த வீழ்ச்சி தடுத்து நிறுத்தப் பட்டது. 2004 ம் ஆண்டில் இருந்து, வெனிசுவேலா பொருளாதாரம் 6,2 வீதத்தால் வளர்ந்தது. (http://www.eclac.cl/ publicaciones/xml/4/48594/ BalancePreliminarDocI2012.pdf)
வெளிநாட்டுக் கடன்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால்,
இன்றைக்கும் வெனிசுவேலா பொருளாதாரம் பெருமளவு எண்ணை ஏற்றுமதியில்
தங்கியிருப்பது மட்டுமே ஒரு குறைபாடாகும்.
6. அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (OAS), அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் லத்தீன் அமெரிக்க நாடுகளை கொண்டு வருவதற்காக உருவாக்கப் பட்டது. சாவேஸ் வந்த பின்னர், அமெரிக்காவுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மென்மேலும் பலவீனப் பட்டது. 2011 ம் ஆண்டு, அந்த அமைப்புக்கு போட்டியாக, "லத்தீன்- அமெரிக்க, கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பு" (CELAC) உருவானது.
7. தங்களை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள பயந்த வேட்பாளர்கள் வாழ்ந்த காலத்தில், 1998 ம் ஆண்டு தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சாவேஸ் சோஷலிசம் பேசி பெரும்பான்மை வாக்காளர்களை கவர்ந்த பின்னர், லத்தீன் அமெரிக்க கண்டத்தில் இடதுசாரி அலை வீசியது. பிரேசில் நாட்டில் லூலா ட சில்வா, பொலிவியா நாட்டில் ஏவோ மொராலேஸ், உருகுவாயில் தபாரே வாஸ்கெஸ், ஈகுவடோரில் ராபேல் கொரெயா, பராகுவேயில் பெர்னாண்டோ லூகோ.... இவ்வாறு பல நாடுகளில் இடதுசாரி ஜனாதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் பட்டனர்.
8. 1989 ம் ஆண்டுக்குப் பின்னர், சோஷலிசம் என்று சொல்வதே கெட்ட வார்த்தையாக இருந்த காலம் ஒன்றிருந்தது. காலமிருந்தது. சோஷலிசம் இன்றைய உலகிற்கு ஒத்துவராத பழைய பஞ்சாங்கம் என்று குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட்டார்கள். சாவேசின் "பொலிவாரிய புரட்சிக்குப்" பின்னர் தான், சோஷலிசம் மீண்டும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலமானது. இது ஒரு இமாலய சாதனை.
******************************
1. சாவேசின் ஆட்சிக் காலத்தில், மனிதவள அபிவிருத்தி விரைவாக உயர்ந்தது. வேலையில்லாப் பிரச்சினை, வறுமை, குழந்தைகள் இறப்பு விகிதம் அரைவாசியாக குறைந்தது. (Human Development Reports, http://hdr.undp.org/en/
2. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு உதவுவதற்காக உணவுப் பங்கீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. சாவேஸ் பதவிக்கு வந்த காலத்தில், 15% மக்கள் போஷாக்கின்மையால் கஷ்டப் பட்டனர். ஐ.நா. வின் FAO அறிக்கையின் படி, இன்று வெனிசுவேலாவில் பசியால் வாடுவோர் யாரும் இல்லை. இலட்சக் கணக்கான வெனிசுவேலா ஏழைகள் வாழ்வில் முதல் தடவையாக மருத்துவ வசதி கிடைத்தது. தொலைதூர கிராமங்களில் கூட, மருத்துவர்கள் நியமிக்கப் பட்டனர். (FAO Report, http://www.fao.org/alc/file/
3. எழுத்தறிவின்மை முற்றாக ஒழிக்கப் பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபாவுக்கு அடுத்தபடியாக வெனிசுவேலாவில் தான் எழுதப், படிக்க தெரிந்த பிரஜைகளின் எண்ணிக்கை அதிகம். உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. இந்த தகவல்களை கொடுத்தது UNESCO.
4. சாவேஸ் பதவிக்கு வருவதற்கு முன்னர், பெரும்பான்மையான மக்கள் தேர்தலில் ஓட்டுப் போடுவதில்லை. வாக்குரிமையுள்ள மொத்த சனத்தொகையில், ஐந்தில் ஒருவர் வாக்காளராக பதிவு செய்யப் படவில்லை. (http://
5. சாவேசின் காலத்தில், ஒரு மூன்றாமுலக வறிய நாடான வெனிசுவேலா, பொருளாதார சுதந்திரம் அடைந்தது. IMF உடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. நாட்டின் பிரதானமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. கூட்டுறவுக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. முதலாளிகளுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், சில விதிகள் மட்டும் மாற்றப் பட்டன. மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கும் முதலாளிகள், அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அரச தலையீடு அதிகரித்தால், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்று உளறிக் கொண்டிருக்கும் பொருளாதார நிபுணர்கள் கவனிக்கவும். 1980 ம் ஆண்டில் இருந்து, வெனிசுவேலா பொருளாதாரம் இறங்குமுகமாக வீழ்ந்து கொண்டிருந்தது. சாவேஸ் பதவியேற்ற பின்னர், அந்த வீழ்ச்சி தடுத்து நிறுத்தப் பட்டது. 2004 ம் ஆண்டில் இருந்து, வெனிசுவேலா பொருளாதாரம் 6,2 வீதத்தால் வளர்ந்தது. (http://www.eclac.cl/
6. அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (OAS), அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் லத்தீன் அமெரிக்க நாடுகளை கொண்டு வருவதற்காக உருவாக்கப் பட்டது. சாவேஸ் வந்த பின்னர், அமெரிக்காவுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மென்மேலும் பலவீனப் பட்டது. 2011 ம் ஆண்டு, அந்த அமைப்புக்கு போட்டியாக, "லத்தீன்- அமெரிக்க, கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பு" (CELAC) உருவானது.
7. தங்களை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள பயந்த வேட்பாளர்கள் வாழ்ந்த காலத்தில், 1998 ம் ஆண்டு தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சாவேஸ் சோஷலிசம் பேசி பெரும்பான்மை வாக்காளர்களை கவர்ந்த பின்னர், லத்தீன் அமெரிக்க கண்டத்தில் இடதுசாரி அலை வீசியது. பிரேசில் நாட்டில் லூலா ட சில்வா, பொலிவியா நாட்டில் ஏவோ மொராலேஸ், உருகுவாயில் தபாரே வாஸ்கெஸ், ஈகுவடோரில் ராபேல் கொரெயா, பராகுவேயில் பெர்னாண்டோ லூகோ.... இவ்வாறு பல நாடுகளில் இடதுசாரி ஜனாதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் பட்டனர்.
8. 1989 ம் ஆண்டுக்குப் பின்னர், சோஷலிசம் என்று சொல்வதே கெட்ட வார்த்தையாக இருந்த காலம் ஒன்றிருந்தது. காலமிருந்தது. சோஷலிசம் இன்றைய உலகிற்கு ஒத்துவராத பழைய பஞ்சாங்கம் என்று குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட்டார்கள். சாவேசின் "பொலிவாரிய புரட்சிக்குப்" பின்னர் தான், சோஷலிசம் மீண்டும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலமானது. இது ஒரு இமாலய சாதனை.
Related Posts : Good to Read,
Politics
No comments:
Post a Comment