Search This Blog

Monday, June 11, 2012

முழு இணைய பக்கத்தையும் Screen Shot எடுப்பதற்கு




எந்தவொரு மென்பொருளும் நிறுவாமலேயே Screen Shot எடுக்கலாம் என்ற போதிலும், முழு தளத்தையும் நம்மால் ஸ்கிறீன் ஷாட் எடுக்க இயலாது.
Capturefullpage.com
இந்த தளத்தில் சென்று உங்களுக்கு ஸ்கிறீன் ஷாட் எடுக்க வேண்டிய பக்கத்தின் முகவரி மட்டும் கொடுத்தால் போதும், அது முழு பக்கத்தையும் எடுத்து தந்து விடும்.
FireShot - Webpage Screenshots - Firefox Add-On
Firefox Browser-ஐ பயன்படுத்துபவர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்கிறீன் ஷாட் எடுக்கலாம். அதை பேஸ்புக்கில் பகிரலாம், உங்கள் கணணியில் சேமிக்கலாம், பிரிண்ட் செய்யலாம். இதிலேயே இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.
Screen Capture - Chrome Add-On
கூகுள் குரோம் பயன்படுத்துபவர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்கிறீன் ஷாட் எடுக்கலாம். இதில் ஸ்கிறீன் ஷாட் எடுக்க பல வித வசதிகளும் உள்ளன. குறிப்பிட்ட பகுதி, முழு பக்கம், முழு ஸ்கிறீன் என இதிலேயும் இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.
DuckLink
ஸ்கிறீன் ஷாட் எடுக்க பயன்படும் மிக அருமையான மென்பொருள் என்றால் அது இது தான். இதை நிறுவி விட்டு, தேவையான பக்கத்தை ஓபன் செய்து வைத்துக் கொண்டு ஸ்கிறீன் ஷாட் எடுக்க கிளிக் செய்தால் போதும், அதன் பின்னர் இதிலேயே எடிட் செய்தும் கொள்ளலாம்.

No comments:

Post a Comment