Search This Blog

Sunday, June 24, 2012

தமிழா இது தான் உன் பகுத்தறிவா ?

 

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், " அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் " கடவுள் " பெயரை சொல்லிவிட்டு சென்றது தான்,ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினாலாவது பயந்து கொண்டு அந்த விடயங்களை கடைபிடிப்பார்கள் என்ற தொலை நோக்கு பார்வையாக கூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக்கெல்லாம் கோயில் எழுப்பி,தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவு படுத்துவர் என்று, இன்றைக்கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அரி கண்டுபிடிப்புகளை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும்,கோவிலுக்கு செல்ல கூடாது,சாமியும் இல்லை,பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறிவின் வெளிப்பாடாக இருக்கின்றது.அது உண்மையா,பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது.ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால்,பலவிதமாக திரித்து இன்று நம் அடையாளங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதே உண்மை
.ஆனால் அதே கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெயரை கூறியதால் இன்று நாத்திகர்கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித " பாசிடிவ் எனர்ஜி " நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு,நம் உடலில் இறங்கினால் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஞானம் கூறுகின்றது.

இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்குகளோ,கல்வி கற்பதற்கு "ஏரிகளின்" மேல் கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அவர்கள் கட்டிவைக்க வில்லை, இவை அனைத்தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத்தையும் கற்க முடியும் என்றால் ( கல வி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது, அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது , அதனால் தான் கோவில் சிற்பங்களில் கலவி சம்மந்தப்பட்ட சிற்பங்கள் கூட காண நேர்கின்றது," கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங்கள் அரங்கேறியுள்ளது, கல்வி கற்க பாட சாலைகள் அமைக்கப்பட்டது, சில கோவில்கள் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டுள்ளது ,உதாரணத்திற்கு திருச்சி, திருவைகுண்டத்தை கூட கூறலாம் அங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னே,வெறும் மூலிகைகளை வைத்து " OPEN SKULL" சர்ஜரி வரை நடைபெற்றுள்ளது. இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை ஆக பெரு வெள்ளம் வரும் போது, பெரும் பாறைகளால், பெரும் உழைபிற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடைந்திருக்க கூடும் , கோவில் தூண்களில் தான் நம் கலைகளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதை தான், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முடன் பயணிக்கும் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் சாதாரணமாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது.அந்த இடமானது பூமத்திய ரேகை கோட்பாடுகளின் படி அறிவியல் அமைப்புகளுடன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது,கோவில் கல்வெட்டுகள் முழுவதும் தான் அது பதியப்பட்டுள்ளது,அந்த கல்வெட்டுகளில் தான் தமிழனின் வரலாறு புதைந்துள்ளது, தஞ்சை பெரிய கோயில் கட்டியது " ராஜ ராஜன் " என்று ஹார்ட் டிஸ்கிலோ, பென் ட்ரைவிலோ,பதியப்படவில்லை, அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது, அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற்பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று யோசித்து பாருங்கள் ! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம் ,மொழி மட்டும் போதும் என்பவர்கள் ,மரங்கள் வேண்டாம் ஆக்சிஜன் மட்டும் போதும் என்று முரண்பாடான கருத்தை கூறுவதைப் போன்றது என்பதை உணரவேண்டும். ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான்,வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப்போகிறோம் ? மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும்,இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்லவிருக்கிறோம்?தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவையேனும் காப்பாற்றுவோம்.வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம்.அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம் !தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்

No comments:

Post a Comment