கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?
- பழமொழி
கொங்கணவ முனிவர் காட்டில் செல்கையில் அவர் மீது ஒரு கொக்கு எச்சமிட்டுவிட்டது. அவர் கோபத்தோடு மேலே நிமிர்ந்து பார்த்தார். அவரது தவ வலிமையில் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது.
அவர் திருவள்ளுவர் வீட்டுக்கு பிச்சை கேட்டு வந்தார். நெடு நேரமாகியும் வள்ளுவர் மனைவி பிச்சை போட வரவில்லை. அவர் கணவருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தார்.
பின்னர் வெளியே பிச்சை போட வந்த போது கொங்கணவ முனிவர் அதே கோபத்தோடு வள்ளுவர் மனைவியயைப்பார்த்தார். ஆனால் அவரது கோபம் வள்ளுவர் மனைவியை எரிக்கவில்லை.
அதுமட்டுமல்ல , வள்ளுவர் மனைவி சிரித்துக்கொண்டே .....
"கொக்கு என்று நினத்தாயோ கொங்கணவா"
என்று கேட்டாராம்.
பத்தினிப் பெண்களுக்கு முக்காலமும் உணரும் சக்தி உண்டு என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. முனிவர் தன்னுடையதவ வலிமையை விட கடைமையைச் செய்யும் பெண்ணுடைய தவ வலிமை பெரியது என்பதை உணர்ந்தார்.
Related Posts : Good to Read,
Spiritual,
Tamil
No comments:
Post a Comment