கி.மு 600ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய எகிப்தின் புகழ் பெற்ற மம்மியின் செயற்கை உறுப்பு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளர் ஜாக்கி பின்ச் எகிப்து நாட்டின் புகழ் பெற்ற மம்மிகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.
அதில் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் மம்மி ஒன்றின் வலது கால் பெருவிரல் ஒன்று, உறுப்பு மாற்று சிகிச்சையின்படி ஒன்றிணைக்கப்பட்டு உள்ளதாக கின்ச் கண்டறிந்துள்ளார்.
கார்பன் ரேட்டிங் அடிப்படையில் அதன் காலம் கி.மு. 600ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி பின்ச் கூறுகையில், 3 பங்கு மரத்தாலும் மற்றும் தோலாலும், ஒரு மனிதனின் 40 சதவீத உடல் எடையை தாங்க கூடிய அளவில் அந்த வலது கால் பெருவிரல் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது உலகின் மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை பெறுகிறது என்றார்.
எனினும் இந்த செயற்கை உறுப்பு குறிப்பிட்ட அந்த மனிதனால் பயன்படுத்தப்பட்ட ஒன்றா அல்லது மம்மியாக மாற்றுவதற்கு என வடிவமைக்கப்பட்டதா என்ற அடிப்படையில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கின்ச் கூறினார்.
இதுவரையிலும் சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ரோமானிய செயற்கை காலே, மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
|
Search This Blog
Monday, June 11, 2012
கி.மு 600ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய எகிப்து மம்மியின் செயற்கை உறுப்பு கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment