Search This Blog

Tuesday, May 8, 2012

வீணாகும் டயர்களால் ரப்பர் சாலைகள்

   

மோட்டார் கழிவுகளில் முக்கியமானது டயர்கள். உலகம் முழுவதும் 100 கோடி டயர்கள் வீணாகக் குப்பையில் வீசப்படுகின்றன. ‘ஆனால் இனிமேல் பழைய டயர்கள் வீணாகாது. அதனை மறுசுழற்சி செய்து ரப்பர் மற்றும் புதிய டயர்கள் தயாரிக்கலாம், புதிய ரப்பர் சாலைகள் அமைக்கப் பயன்படுத்தலாம்’ என்கிறார் ஆஸ்திரேலியாவின் டீகின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குய்பெங் குவா (Qipeng Guo).

பழைய டயர்களை குப்பையோடு குப்பையாக வீசுவதால் நிலத்தடி நீர் கெட்டு, சுற்றுச்சுழல் பெரிதும் மாசுபடுகின்றது. குப்பையில் வீசப்படும் டயர்களை எரிப்பதாலும், புதைப்பதாலும் அதிலிருந்து வெளியாகும் ரசாயன வகைகள் வளிமண்டலத்தில் கலந்து காற்றினை மாசுபடுத்துகின்றன.

இதற்கு மாற்றாக புதிய தொழில் நுட்பத் தீர்வினை குய்பெங் குவா கண்டுபிடித்துள்ளார். ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் குறைந்த அளவிலான மின்சாரத்தைக் கொண்டு டயர்களை மறுசுழற்சி செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனைப் பயன்படுத்தி புதிய டயர்கள், கார் பாகங்கள் தயாரிக்கலாம். மேலும் ரப்பர் சாலைகள் அமைக்கலாம். பொது இடங்களில் குப்பைத் தொட்டியாகவும் இந்த டயர்களை மாற்றிப் பயன்படுத்தலாம்.

டயரை மறுசுழற்சி செய்யும்போது கிடைக்கும் Ruberized Asphat Concrete (RAC) என்ற கூழைப் பயன்படுத்தி, சாலைகள் போடும்போது உறுதியான சாலைகள் பெற முடியும் என்கிறார்கள். இவ்வகையான ரப்பர் சாலைகளை அமைக்கும்போது 50 சதவிகிதம் செலவினம் குறையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது. ‘புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது இந்த ரப்பர் சாலைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது’ என்கிறார் குய்பெங் குவா.

நமது அரசுகளும் மனது வைத்தால் மார்க்கம் பிறக்குமே!
நன்றி :புதிய தலைமுறை.

No comments:

Post a Comment