சளியை விரட்டும் கொய்யாப்பழம்
குளிர்காலத்தில், கொய்யாப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்ற கருத்தினை இயற்கை மருத்துவம் மறுக்கிறது. உண்மையில் கொய்யாப் பழம் சளியை விரட்டி, சளி ஏற்படும் பிரச்னைகளுக்கு நிவாரணம் தரும் என்பதே அறிவியல் பூர்வ உண்மையாகும்.
கொய்யாப்பழத்தில் நெல்லிக் காயை போல "வைட்டமின் சி' சத்து நிறைந்துள்ளது. வளரும் குழந்தைகள், தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப்பழங்களை சாப்பிடுவது நல்லது. ரத்த சோகை இருப்பவர் களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் கொய் யாப்பழம் நல்ல அருமருந்தாகும்.
இயற்கை மருத்துவத்தில் மா இலையுடன், கொய்யா இலையைக் காய வைத்து அரைத்து, பல்பொடியாகப் பயன்படுத்தினால் பல்லில், ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுவீக்கம் போன்றவை குணமாகும் என கூறப்படுகிறது. உடலின் சூட்டினைத் தணிக்கும் இயல்பும் கொய்யாப் பழத்திற்கு உள்ளது.
Related Posts : Health
No comments:
Post a Comment