Search This Blog

Wednesday, May 23, 2012

இப்படியுமா ஆண்கள்?


மாற்றத்தை உணராத மடையர்களா ஆண்கள்? ஆம் என்கிறது ஒரு சர்வே ரிப்போர்ட். 
உலகம் தோன்றிய நாள் முதலாக ஆண்களிடம் குற்றம் கண்டு பிடிப்பதே பெண்களின் வேலை என்றாகிவிட்டது . இதை ஒரு நிறுவனம் 2 ஆயிரம் பெண்களிடம் பேட்டி கண்டு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.

அப்படி என்ன புதிய குறையை கண்டு பிடித்திருக்கிறார்கள்? 

வீட்டின் உள் அலங்காரத்திலோ, அறைகளில் போடப்பட்டிருக்கும் தளவாடங்களிலோ(Furnitures), சுவர் சித்திரங்களிலோ ஏதாவது மாற்றம் செய்தால் அதை ஆண்கள் கண்டு பிடிப்பதே இல்லையாம். அப்படியே கண்டு கொண்டாலும் அதை வெளி காட்டிக்கொள்வதில்லையாம். அப்படியே மாற்றத்தை சுட்டிக்காட்டி கேட்டாலும் பாராட்டி வார்த்தை பேசுவதில்லையாம். 
குற்றப்பத்திரிகை வேறு வாசிப்பார்கள். இத்தோடு முடிகிறதா என்றால் இல்லை. அப்படியே ஒருவேளை மாற்றத்தை தெரிந்து கொண்டாலும் சரி அதான் மாத்தியாச்சே...இனி இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு என்னவோ பண்ணித் தொலைக்க வேண்டியது தானே என்று எரிந்து விழுகிறார்களாம் சிடுமூஞ்சி ஆண்கள்.

சரி, இந்த சர்வேயில் பாராட்டே கிடையாதா என்றால் உண்டு. ஆனால் பாராட்டு அம்மணிகளின் அம்மாக்கள் தான்.

ஆம் எந்த வீட்டில் என்ன மாற்றம் செய்தாலும் அந்த பெண்ணுடைய அம்மாக்கள் உடனே கண்டு பிடித்து விடுகிறார்களாம்.  (மாமியார்களும் கண்டு பிடிப்பார்கள். ஆனால் அது மிக பெரிய சண்டையில் சென்று முடியும் என்பதால் சர்வே நிறுவனம் எச்சரிக்கையாக அதை கேட்கவே இல்லை.) 

"இந்த மஜந்தா கலர் திரை சீலை வாங்கினாயா? அல்லது உங்க வீட்டுகாரர் பழைய வேட்டியா? (மஜந்தா - மருமகன் வேட்டி அவ்வளவு அழுக்கு) என்று அம்மாக்கள் சட்டென்று கேட்டு விடுகிறார்களாம். கூடவே 3000 ரூபாய் கொடுத்து வாங்கிய புடவையை பழைய பாத்திரக்காரரிடம் 40 ரூபாய்க்கு  போட்டு கூடவே 300ரூபாய்  
கொடுத்து கை துடைக்கிற டவல் வாங்கிய சாமர்த்தியத்தையும் பாராட்டி விடுகிறார்களாம்.

பாவம் ஆண்கள்- அசடு , அசமஞ்சம், மாற்றத்தை உணர தெரியாத ஜடம், ரசிக்க தெரியாத ஜந்து, சிரிக்க மறந்த பிராணி, பரந்த மனதில்லாத ஜென்மம் என்றெல்லாம் பட்டம் வேறு வாங்க வேண்டியிருக்கிறது.. 
காலம் பூராவும் பெண்களிடம் ஏச்சு வாங்கவே பிறந்ததுதான் ஆண்களின் தலை விதி போலும்.. 

No comments:

Post a Comment