இன்றைக்கு 13000 ஆண்டுகளுக்கு முன்னம் ஈரான் நாட்டுப் பகுதியில் இருந்து மந்தை மேய்த்துக் கொண்டு ஒரு வெள்ளையினக் கூட்டத்தார் ஆப்கானிய கைபர் கணவாய் ஊடாக நாவலந்திவினுள் அதாவது இந்தியாவிலுள் நுழைந்தனர். காலப் போக்கில் அவர்கள் வடஇந்தியப் பகுதி முழுவதிலும் பரவியிருந்தனர். இவர்கள் வடவர் எனப்பட்டனர். இவர்களில் கல்வியறிவுடைய முதியோர் சிலர் சான்றோர் போலவும், செந்தண்மை உடையோர் போலவும் மாற்றுரு செய்துகொண்டு தமிழகத்துள் ஊடுருவினர்.இந்தவகையில் வந்தவர்களில் ஒருவர் தான் சீனதேசத்து குறுமுனி அகத்தியர் .போகர் என்று அழைக்கப்படும் போ ஹங் போன்றவர்கள் .இவர்களின் சித்து விளையாட்டுக்களுக்கு அடிமை ஆகிய தமிழர்கள் இவர்களிடம் ஏமாந்து ஏற்றி துதித்தனர் . இவ்வாறு சிறிதுசிறிதாக தமிழகத்துள் இடம்பிடித்த வடவர், தமிழைக் கற்றுத் தங்களை உயர்த்திக் கொண்டனர். மனதால் உயர்ந்த தமிழர் இவர்களை ஆரியர் என்று சிறப்பித்தனர். காலப்போக்கில் இவர்கள் வேள்விகளைச் செய்து ஆடுமாடு, விலங்குகளைக் கொன்று தின்பதைத் தமிழ் மக்கள் எதிர்த்தனர். அதனால், தங்களது வேள்விகளைச் செய்யமுடியாது தவிர்த்த வடவர், தமிழரசர்களை அழிப்பதற்குச் சூழ்ச்சி செய்தனர். தமிழகத்தில் புகுந்து அரசர்களி டையே கோள்சொல்லியும் புறங்கூறியும் பகையைத் தோற்று வித்து, இரண்டகர் களையும் உருவாக்கினர். தமிழரது ஒற்றுமை உடைந்தவுடன் வடவரின் படை கொண்டு பிரிந்து நலிந்த தமிழரசர்களை அழித்தனர். அவ்வகையில், அயோத்தி யிலிருந்து முனிவர்களால் அழைத்து வரப்பட்டவன் தான் இராமன் என்னும் இளவரசன்.
இராமனை அழைத்துவந்து வலிமை உடைய தமிழ் அரசன் வாலியை அவன் உறவுகளுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்து வஞ்சகமாய் கொன்றபின் .தென்னிந்திய சிற்றரசர்களையும் சேர்த்துக்கொண்டு அசைக்க முடியாத மிகப்பெரும் சாம்ராச்சியமாக இருந்த குமரிக்கண்ட கடல் அழிவில் எஞ்சிய 49 பது சிறிய நாடுகளையும் பத்து முடிக்குரிய பெரிய நாடுகளையும் ஈழத்தில் மகேந்திர மலையில் இருந்து அரசாண்ட சிவதாசன் என்கின்ற இராவணனை எதிர்த்து போரிட ஆரியர்கள் முடிவெடுத்தார்கள் .இதற்கு இராமனை தலைமை வகிக்க வைத்தார்கள் .
இராமனுக்கும் இராவணனுக்கும் போர் மூண்டது. போரில் இரண்டகர்களான இராவணனின் தம்பி வீடணன் என்பவனும் இராவணனது புகழ் கண்டு பொறாமையுற்ற சில தமிழகச் சிற்றரசர்களும் இராமனுக்குத் துணை நின்றனர். போரில் இராவணன் போரறங்களைக் கடைப்பிடிக்க, இராமன் அறங்களை மீறியும் சூழ்ச்சிகள் செய்தும் மாவீர இராவணனையும் அவனுடைய துணைவரையும் கொன்று, வீடணனுக்கு முடிசூட்டினான். இந்தக் கதையை வான்மீகி என்னும் வடனாட்டுப் புலவன் பாடினான். அதன் பெயர் ”இராமாயணம்”. இராமாயணம் தமிழரைத் தாழ்த்தும் நோக்குடன், இராவணனை அரக்கன் என்றும் மாபெரும் கொடியன் என்றும் இராமன் ஒரு சான்றோன் போலவும் பாடப்பட்டது. பிற்காலச்சோழர் காலத்தில் கி பி . 10ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆரியம் முற்றாக மூடியிருந்த வேளையில் மாபெரும் கவிவேந்தனான கம்பன் இராமாயணத்தைத் தமிழில் பொழி பெயர்த்தான். அன்றைய தமிழரசர்கள் ஆரிய அடிமைகளாகி விட்டதாலும் இராமனைத் திருமாலின் தோற்றம் என்று கருதியதாலும், அவனைத் தெய்வனிலைக்கு உயர்த்த விரும்பி, இராவணனை வான்மீகி பழித்ததைவிட மிக இழிவாக உருவகப்படுத்திப் பாடினான். ஆரியதாசனான கம்பன், அன்னாளில் தமிழகத்தில் இருந்தவர் கள் எல்லாம் குரங்குகள் அரக்கர்கள் என்றும் பாடிவிட்டான். தமிழினத்தின் இன்றைய இழினிலைக்கு களம் அமைத்தவர்களில் கம்பன் முதற் குற்றவாளி, பின்னாளில் இந்திய பார்ப்பனர் கம்பராமாயணத்தைத் தெய்வீகக் கதை என்றும் அதைப் படித்தாலோ, படிக்கப் பக்கம் நின்று கேட்டாலோ சொர்க்கம் எய்தலாம் என்று கதையைக் கட்டிவிட, அடிமைத் தனத்தில் மூழ்கிக் கிடந்த தமிழர் அதை நம்பி, இராமாயணத்தை போற்றுதற்குரிய நூலாகவும் பல்கலைக்கழகப் பாடமாகவும் ஏற்றுக்கொண்டனர். அதன்பயனாக, இராமனவமி என்று இராமனது பிறந்த நாள் கொண்டாடப்படும் நாளன்று இராவணனுடைய கொடும்பாவியைக் கூடத்தமிழன் எரிக்கிறான். ஒரு தமிழ் மாவீரனை, சான்றோனை, ஈசன் என்ற அடைமொழியால் போற்றப்பட்ட தமிழ் வேந்தனை, வடவாரியத்தின் ஏமாற்றை நம்பி தமிழனே இழிவு படுத்துகிறான். கம்பராமாயணத் தாலும் பாரதத்தாலும் மூளைக்கு விலங்கிடப்பட்டு, விதி எது மதி எது என்று புரியாமல் ஆரிய மாயையில் தமிழர்கள் அன்றும் இன்றும் மூழ்கி கிடக்கின்றார்கள் . இன்னிலையில், விழித்தெழுந்த தமிழறிஞர்கள் தமிழைக்காக்க முயற்சி செய்து . ஆய்வுகள் தேடல்கள் மூலம் ஆரியத்தின் பொய்புளுகுகளையும் நயவஞ்சகங்களையும் வெளிக்கொணரத் தொடங்கினர். இராமாயணத்தையும் ஆய்வு செய்து, உண்மை இராவணன் யார்? அவனுடைய சிறப்பியல்புகள் எவை? இராமனின் உண்மைத் தோற்றம் என்ன? அவனது குணநலன்கள் யாவை?என்று பெளத்தறிவு ரீதியாக யதார்த்தத்தை தெளிவு படுத்த பலவழிகளில் முயற்சிக்கின்றார்கள் .கம்பனின் கவித்துவ புலமைக்குள் இலக்கிய சுவை அமுதத்தில் திளைத்தவர்கள் உண்மையை விளங்கி கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருப்பது தமிழர் வரலாற்றில் ஒரு மிகப்பெரும் சாபம் ஆகிவிட்டது .ஆரிய தாசனாகி போன கம்பனை மாற்ற அன்றைய அரசர்களாலும் முடியவில்லை .அதற்காக அவன் மைந்தனை கூட கவி பாட வைத்து அரசன் தண்டனை வழங்கினான் .இருந்தும் கம்பன் திருந்தவில்லை ,.இன்றும் கம்பன் சொன்னதை வேதவாக்காக கொண்ட தமிழர்களையும் திருத்த முடியவில்லை ,,,,தமிழர்களில் உண்மை வரலாறு செத்த பின் தமிழ் மொழி வாழ்ந்து எந்த பிரயோசனமும் இல்லை ,,,,,,,
No comments:
Post a Comment