ஒற்றைத் தலைவலி ஏற்பட முக்கியக் காரணம் அதிகமான மன அழுத்தம் தான். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் இருப்பார்கள்.
ஒற்றைத் தலைவலிக்கு வயிறு மற்றும் பார்வையுடனும் தொடர்பு இருக்கிறது. எனவே வயிற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும், பார்வைத் திறனை அவ்வப்போது பரிசோதித்து தகுந்த நிவர்த்திகளைச் செய்து கொள்வதும் அவசியம்.
குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம், ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப் பழக்கம், புகைப் பழக்கம், அதீத பாலுணர்வு இச்சை போன்றவையும் ஒற்றைத் தலைவலிக்குக் காரணமாக அமைகின்றன.
இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல், வயிறுப் பிரச்சினைகள் ஆகியவை ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளாக இருக்கின்றன.
மேலே குறிப்பிட்டவாறு பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. எனவே எந்தக் காரணத்தால் தங்களுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டிருக்கும் என்று கண்டறிந்து தீர்வு காண முயல வேண்டும். எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலனைத் தரும்.
|
Search This Blog
Tuesday, May 15, 2012
ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment